தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கரிகாற் சோழ கலையரங்கில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
பள்ளி நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி, கல்லூரி வாகன ஒட்டுநர்கள், நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறுவது மகிழ்ச்சியான விஷயமாகும். நாம் அன்றாடம் செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளிலும், இணைய தளத்திலும், விபத்து தொடர்பான நிறைய செய்திகளை பார்க்கின்றோம். பள்ளி வாகன ஒட்டுநர்கள் தங்கள் கடமை, பொறுப்புகள் உணர்ந்து வாகனம் ஒட்ட வேண்டும். தங்கள் உடல்நிலை, மன நிலை சரியில்லை என்று தோன்றினால், உங்கள் நிர்வாகத்திடமோ அல்லது உரிமையாளரிடமோ அதனை தெரிவித்து மாற்று ஒட்டுநரை அமர்த்த வழியுறுத்த வேண்டும். வாகனத்தை எடுக்கும்பொழுது வாகனத்தில் அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதை சரி பார்த்து வாகனத்தை எடுக்க வேண்டும். அலட்சியத்தின் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகனங்கள் முறையாக இயக்கி பெற்றோர்களின் குழந்தைகள் குறித்த கவலைகளை போக்க வேண்டும். சென்னை உயர்நீதி மன்றம், ஹெல்மேட் அணிவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக வாகனம் ஒட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் திரு.பிரசாத், வட்ட போக்குவரத்து வாகன ஆய்வாளர் திரு.விஜயகுமார் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி, பள்ளி வாகன ஒட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.