தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் வேல் முருகன் (வயது 35). கேரளாவில் முடி திருத்தம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.
பட்டுக்கோட்டையிலிருந்து இன்று இரவு 8.30 மணியளவில் பாயின்ட் டூ பாயின்ட் அரசு பேரூந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது. பேருந்து சேண்டாக்கோட்டை அருகே வந்த போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த வேல் முருகன் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க மற்றும் பின்பக்க சக்கரங்கள் உடலில் ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்தில் கூடிய இப்பகுதியினர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் குருமூர்த்தி, பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சேண்டாக்கோட்டை பகுதியில் கடந்து செல்லும் அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் வழித்தட பாயின்ட் டூ பாயின்ட் அரசு பேரூந்துகள் அதிவேகமாக செல்வதாகவும், இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து நடக்கிறது என்றும், இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக எழுத்துபூர்வ கோரிக்கை அளித்தால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் இறந்த உடல், பிரத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டன. விபத்து குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு ஓட்டிச்செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் இப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிப்படைந்தது.
செய்தி மற்றும் படங்கள்:
அதிரை மைதீன்



அதிரையில் இயங்கும் மற்ற இணைய வலைத்தளங்களை காட்டிலும், செய்திகளை நிதானமாகவும், விரிவாகவும், ஆதாரத்துடனும் தருவதில் அதிரை நியூஸ் நம்பர் ஒன்.
ReplyDeleteஇதனால் நான் அதிரையில் இயங்கும் மற்ற இணைய வலைத்தளங்களை குறை கூற வரவில்லை.
செய்திகளை கொடுப்பதில், முந்த வேண்டும், அதே நேரத்தில் முழுமையான செய்திகளை கொடுத்தால் பார்ப்பவர்களும் படித்து முழுமை அடைவார்கள்.