.

Pages

Wednesday, May 31, 2017

கரையூர்தெரு தீ விபத்தில் பாதித்தோருக்கு வீடு கட்டித்தர மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரிக்கை !

அதிராம்பட்டினம், மே 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

தகவலறிந்த  மக்கள் அதிகாரம் பட்டுக்கோட்டை வட்டார நிர்வாகிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் தீ விபத்தில் பாதிப்படைந்த 50 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக  அரிசி, சேலை, பள்ளி நோட்டு புத்தகங்கள், சிறுவர் சிறுமிகளுக்கு ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கூறுகையில்;
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவர் கிராமத்தில் கடந்த மே 29ந் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 54 குடிசைகள் தீயில் கருகி தரைமட்டமானது. இதில் இலட்சக்கனக்கான பொருட்கள் எரிந்து நாசமானது. நூற்றுக்கணக்கான மக்கள் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு இல்லாத மக்களுக்கு அரசு கொடுக்கும் நிவாரணமோ வெறும் 5 ஆயிரம் ரூபாய். இது வாயிக்கும், வயிற்றுக்கும் கூட போதாது.

அந்த வகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போர்கால அடிப்படையில் செய்து தரவேண்டும்.  வீட்டை இழந்து தெருவில் நிற்கும் மக்களுக்கு தரமான வீடு கட்டித்தர வேண்டும், மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவ மக்களுக்கு வலைகளை வழங்கி வாழ்வாதாரத்தை உறுதிபடுத்து வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன்' என்றார்.
 
 
 
 

கரையூர் தெரு தீ விபத்து: அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் ரூ 1.50 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி !

அதிராம்பட்டினம், மே 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

தகவலறிந்த அதிரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அதிரை ரோட்டரி சங்கம் சார்பில், தீ விபத்தில் பாதிப்படைந்த 50 குடும்பங்களுக்கு 1.50 லட்சம் மதிப்பீட்டில், நிவாரண உதவியாக ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மளிகைப் பொருட்கள், உயர் தர அரிசி, சில்வர், அலுமினியப் பத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கினார்கள்.

இதில், ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம். வெங்கடேசன், செயலாளர் ஜி. சந்திரசேகர், பொருளாளர் டி. முஹம்மது நவாஸ்கான், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உதயகுமார், தீன் மெடிக்கல்ஸ் சம்சுதீன், முதுகலை ஆசிரியர் அஜ்முதீன், அகமது மன்சூர், மலர் ஜுவல்லரி அப்துல் காதர், முஹம்மது தமீம், ஹாஜா பகுருதீன், வைரவன், கண்ணன், ஆறுமுகம், அய்யாவு, ராஜேந்திரன், நடராஜன், நவாஸ்கான், அப்துல் ஹலீம், சேக்தாவூது, சலாஹுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

சவூதியில் விளம்பர நோட்டீஸ்களை விநியோகித்தால் இனி 500 ரியால் அபராதம்

அதிரை நியூஸ்: மே 31
பொதுவாக அரபு நாடுகளில் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வியாபாரம் மற்றும் விலைச் சலுகைகள் குறித்த துண்டு நோட்டீஸ்களை (Promotional Brochures) அனைத்து வீட்டு வாசல்கள் (Doorsteps) மற்றும் வரவேற்பு மண்டபத்திலும் (Building Receptions) விட்டுச் செல்வர், இன்னும் சிலர் சுவர்களில் ஒட்டியும், சிலர் தெருக்களில் நின்று விநியோகித்தும் வருவர்.

இந்த செயல்களால் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதாக கருதிய 'நகராட்சி மற்றும் கிராம அலுவல்களுக்கான அமைச்சகம்' (Ministry of Municipal & Rural Affairs) இத்தகைய செயல்களுக்கு தடைவிதித்துள்ளதுடன் 500 ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மேற்சுட்டிய குற்றங்களை தனியார்கள், வர்த்தக நிறுவனங்கள், பெரிய வணிகக் குழுமங்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள் என அனைவரும் செய்து வருவதாகவும், விளம்பர நோட்டீஸில் வெளியிடப்பட்டிருக்கும் தொடர்பு எண்களை கொண்டு குற்றமிழைப்பவர்களின் அபராத விபரங்கள் சவுதியர்களுடைய அடையாள (Saudi ID) அட்டை அல்லது தங்குமிட விசா அனுமதி (Iqamas - Residential Permits) விபரங்களுடன் இணைக்கப்படும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

சவுதியா விமானங்களில் 9 அயல்நாட்டு மொழிகளில் வீட்டுத் தொழிலாளர்கள் உரிமைகள் பற்றிய வீடியோ ஒளிப்பரப்பு !

அதிரை நியூஸ்: மே 31
சவுதி தொழிலாளர் நல அமைச்சகமும் சவுதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் அரபி உட்பட 9 அயல்நாட்டு மொழிகளில் வீட்டுப்பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பணி குறித்த விபரங்களை வீடியோ காட்சிகளாக சவுதியா விமானங்களில் ஒளிபரப்ப கூட்டாக முடிவு செய்துள்ளன.

தொழிலாளர் ஒப்பந்தம், சம்பளம், பணி நேரம், பயிற்சி மற்றும் தகுதியை உயர்த்திக் கொள்ளல், பணி நிறைவு சம்பளம், விடுமுறை, தொழிலாளர் கமிட்டி குறித்த அனைத்து விபரங்களையும் வீட்டுப்பணியாளர்களின் விழிப்புணர்வுக்காக ஒளிபரப்பவுள்ளது.

அரபி, இங்கிலீஷ், பெங்காளி, தகலோக் (பிலிப்பைனி), உருது, இந்தோனேஷியன், மலாய், ஹிந்தி மற்றும் அம்ஹாரிக் (எத்தியோப்பியா) ஆகிய மொழிகளில் இந்த வீட்டுத் தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலைச்சூழல்கள் குறித்து இந்த விளக்க விழிப்புணர்வு வீடியோ எடுத்துரைக்கும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ( படங்கள் )

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க முடியாததால், தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 8 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது.

கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இயலாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட துணிக்கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவையும் உடனடியாக அகற்றப்பட்டன.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், ''மனிதர்கள் யாரும் விபத்தால் பாதிக்கப்படவில்லை. கட்டிடத்தின் உள்ளே இருந்த 14 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வணிக நிறுவனங்களையும், சிறு கடைகளையும் திறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கட்டிடங்களின் அருகில் வாகனங்கள் எதையும் நிறுத்த வேண்டாம்.

சாலைப் போக்குவரத்து வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளது. ஆர்வம் காரணமாக பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பவ இடம் முழுவதையும் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''புகை மூட்டம் அதிகமாக இருப்பதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது. சேதங்கள் எதுவும் இன்றி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. போதுமான மனித வளம், உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் தீ விரைவில் அணைக்கப்படும்'' என்று தெரிவித்தார்

நன்றி: தி இந்து தமிழ்
 
 
 
 
 
 
 

ஷார்ஜா முக்கிய சாலைகளில் 30 அதிநவீன ரேடார் கேமிராக்கள் கண்காணிப்பு !

அதிரை நியூஸ்: மே 31
ஷார்ஜாவில் போக்குவரத்து குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் பன்முக செயல்பாட்டுத் தன்மை வாய்ந்த 30 அதிநவீன கேமராக்களை ஷார்ஜா போலீஸ் முக்கிய சாலைகளில் புதிதாக பொருத்தியுள்ளது. இவை 3G தொழில்நுட்பத்தில் இயங்குபவை.

மலீஹா, ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு, அல் எதிஹாத் ரோடு, எமிரேட்ஸ் ரோடு மற்றும் ஷார்ஜா – தைது ரோடு (Sharjah - Dhaid Road) ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் முன், பின் என இருபுறமும் செயல்படும் வல்லமை உடையவை. மேலும், ஒரே நேரத்தில் பலவித போக்குவரத்துக் குற்றங்களையும் படம்பிடிப்பதுடன் அவற்றை வீடியோ பதிவுகளாகவும் உடனுக்குடன் ஷார்ஜா போக்குவரத்துத் துறைக்கு அனுப்பும்.

அவற்றுடன் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், வரையறுக்கப்பட்ட வேகத்தை விட மெதுவாக செல்லும் வாகனங்கள், இரண்டு வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி தராத வாகனங்கள், அனுமதிக்கப்படாத லேன்களில் செல்லும் கனரக வாகனங்கள், அனுமதி இல்லாத நேரத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்கள், முரட்டுத்தனமான முறையில் இயக்கப்படும் வாகனங்கள் என அனைத்தை கண்காணிக்கும்.

ஷார்ஜா போலீஸ் குறிப்பிட்டுள்ளபடி இந்த ரேடர் கேமராக்கள் ஒரே நேரத்தில் பல வாகனங்களையும், பல லேன்களை கண்காணிக்க கூடியவை. ஒரே நேரத்தில் நடக்கும் பலவகையான போக்குவரத்துக் குற்றங்களையும் வாகன வாரியாக போட்டோ ஆதாரத்துடன் தரம்பிரித்துக் தரவல்லவை. முன் பின் வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கக்கூடியவை, கடுமையான போக்குவரத்து நெரிசலின் போதும் துல்லியமாக செயல்படக்கூடியவை, வேகக்கட்டுப்பாட்டை ஒவ்வொரு வகை வாகன வகைக்கும் அனுமதிக்கப்பட்ட அளவில் பிரித்தறிய கூடியவை. வீடியோ பதிவுகளை நேரலை செய்யக்கூடியவை என பல சிறப்பம்சங்கள் உள்ளதாக கூறியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் இஃப்தார் நேரத்தில் மஸ்ஜிதுகள் அருகே இலவச பார்க்கிங் வசதி !

அதிரை நியூஸ்: மே 31
துபையில் ரமலான் காலத்தில் மாலை 5 மணிமுதல் 7 மணிவரை இலவச பார்க்கிங் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் நோன்பாளிகளின் நன்மையை கருதி தற்போது கூடுதலாக பள்ளிவாசல்களை சுற்றியுள்ள பார்க்கிங்குகளில் மஃரிப் பாங்கு சொன்னது முதல் 45 நிமிடத்திற்கு இலவச பார்க்கிங் சலுகையை துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த சலுகை முறையாக பார்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்துவோருக்கு மட்டுமே மாறாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் நடைபாதைகளில் நிறுவோருக்கும் இச்சிறப்பு சலுகை பொருந்தாது மாறாக வழமையான அபராதங்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Tuesday, May 30, 2017

அதிரையில் அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பழைய இரும்பு கடைக்குள் புகுந்து விபத்து: ஓட்டுனருக்கு காயம் !

அதிராம்பட்டினம், மே 30
அதிராம்பட்டினத்தில் அரசுப் பேருந்து  - லாரி நேருக்கு நேர் மோதி பழைய இரும்பு கடைக்குள் புகுந்து விபத்து. ஓட்டுனருக்கு காலில் பலத்த காயம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து அரசுப் பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் வழியாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை நோக்கி சென்றது. பேருந்து அதிரை வண்டிப்பேட்டை ஐயப்பன் கோவில் அருகே வந்த போது, எதிரே வந்த சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பழைய இரும்புக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுனர் சந்தனராசுக்கு (56 ) காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 

கரையூர் தெரு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அதிரை பைத்துல்மால் நிவாரண உதவி !

அதிராம்பட்டினம், மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

தகவலறிந்த அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் நிர்வாகிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அதிரை பைத்துல்மால் சார்பில் தீ விபத்தில் பாதிப்படைந்த 50 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக உயர்தர அரிசி தலா 5 கிலோ வீதம் வழங்கினார்கள்.
 
 
 
 
 

அதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற ( மே ) மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் மே மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் அலுவலகத்தில் கடந்த [ 26-05-2017 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
 
 
 
 
அதிரை பைத்துல்மாலின் மே மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் விவரங்கள்: