அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு மழைநீர் வடிகாலை தூர் வாரி, வடிகாலில் அசுத்தங்கள், கழிவுகள் கலப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ. விவேகானந்தம் இன்று (நவ.07) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பது;
அதிராம்பட்டினம் பேரூராட்சி 21வது வார்டில் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும் இஜாபா பள்ளிவாசலுக்கும் இடையேயுள்ள மழை நீர் வடிகாலில் குப்பைகள்மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கழிவு நீரும் இதில் விடப்படுகின்றன. தற்சமயம் மழை நீரும் வடியாமல் சேர்ந்துள்ளன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.துர்நாற்றமும் வீசுகின்றன. பள்ளிக்கூடத்தில் பயிலும் ஓராயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள், இஜாபா பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வரும் இறையன்பர்களும் கொசுக்கடியாலும் துர்நாற்றத்தலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழை நீர் வடிகாலை தூர்வாரவும் , இவ்வடிகாலில் சாக்கடை கழிவு நீரை விடாமல் இருக்கவும் வீட்டுக்கழிவுப்பொருட்கள், கட்டிடக்கழிவுகளை குடியிருப்பு வாசிகள் கொட்டாமல் இருக்கவும் பொதுசுகாதாரசட்டம் மற்றும் உள்ளாட்சி சட்டப்படியும் அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் பொதுசுகாதாரதுறையினர் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வார்ட் கவுன்சிலர் என்னா செய்கின்றார்?
ReplyDelete