தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை நிலவரம் குறித்து அதிராம்பட்டினம் வெதர்மேன் சாவண்ணா என்கிற ஏ. சாகுல் ஹமீது வழங்கும் மழை ரிப்போர்ட்;
அதிராம்பட்டினத்தில், கடந்த,
அக். 21 ந் தேதி 03.40 மி.மீ
அக். 26 ந் தேதி 0.50 மி.மீ
அக். 29 ந் தேதி 06.40 மி.மீ
அக். 31 ந் தேதி 49.50 மி.மீ
நவ. 01 ந் தேதி 04.50 மி.மீ
நவ. 03 ந் தேதி 07.20 மி.மீ
நவ. 04 ந் தேதி 26.60 மி.மீ (காலை)
நவ. 06 ந் தேதி 26.00 மி.மீ
நவ. 07 ந் தேதி 06.70 மி.மீ (காலை)
என மொத்தம் 166.80 மி.மீ ( 16.68 செ.மீ ) மழை இன்று நவ. 7 ந் தேதி காலை 8.30 மணி வரை பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு 622.78 மி.மீ, 2016 ஆம் ஆண்டு 521.61 மி.மீ, 2017 ஆம் ஆண்டு ( நவ. 7 ந் தேதி வரை ) 849.33 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இவை, கடந்த ஆண்டுகளை வீட நடப்பாண்டில் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.
இந்த பருவ மழையால், அதிராம்பட்டினம் பகுதி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்து இருப்பது மகிழ்வைத் தந்தாலும், அதிரையில் உள்ள ஒரு சில குளங்களைத் தவிர மீதமுள்ள குளங்களில் மழை நீர் நிரம்பாதது வருத்தமளிக்கிறது. காரணம், குளத்திற்கு வருகின்ற மழைநீர் வடிகால் பாதைகளில் சூழ்ந்துள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் குளத்தில் போதுமான மழைநீர் நிரம்பாமல் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நீர் அனைத்தும் வீணாகக் கடலில் சென்று கலந்து வருகிறது.
பருவ மழை பெய்வதற்கு முன்பாகவே குளங்களுக்கு செல்லும் நீர் ஆதார வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணிகளில் தன்னார்வல இளைஞர்கள் முழு மூச்சாக ஈடுபட வேண்டும். இனிவரும் காலங்களில் மழைநீரை சேகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, அதற்கான முயற்சியில் அதிராம்பட்டினம் பகுதி ஒவ்வொரு பொதுமக்களும் ஈடுபட வேண்டும். சுற்றுச்சூலலைப் பாதுகாக்கும் வகையில், குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் அதிக மரக்கன்றுகளை நடவேண்டும். அரசு வலியுறுத்தும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை வீடுதோறும் அமைத்து, அதில் மழைநீரை சேகரிக்க வேண்டும்' என்றார்.
செய்தி தொகுப்பு மற்றும் படம்:
அஜீம் (மாணவச் செய்தியாளர்)

மழைக்காலங்களில் "வெதர்மேன் " கோடைகாலங்களில் சம்மர் மேனா? மழை பெய்யாத நேரத்தில் இவரு குடைபிடிப்பாராம்- நல்லா படத்தை பாருங்க; தாங்கமுடியல ; ஊரிலே ரொம்ப பேரு இப்படி தான் அடைமொழி போட்டுக்கிறாங்க; சரி எந்த சேனலில் இவரின் செய்தி வருது?
ReplyDeleteதம்பி மஸ்தான் கடந்த 1O நாட்க்க லாக அதிரையில் கொட்டிய மழையின் அளவு தான் சொல்லி இருக்கோம் வேர ஒன்றும் இல்லையே? மழை அதிரையில் கொட்டும் போது எவட இருந்தீர்
ReplyDelete