.

Pages

Monday, November 13, 2017

28 கிலோ எடையில் குழந்தை ~ தடுமாறும் மருத்துவர்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.13
மெக்ஸிக்கோ நாட்டின் கோலிமா மாநிலத்தை சேர்ந்த மரியோ கொன்சாலஸ் - இஸபெல் பொன்டிஜா தம்பதியினருக்கு 2 வது மகனாய் பிற குழந்தைகளைப் போலவே சுமார் 3.5 கிலோ எடையுடன் பிறந்தான் லூயிஸ் மானுவெல் கொன்சாலஸ்.

லூயிஸ் இரண்டே மாதங்களில் 10 கிலோவாக அதிகரித்தான் பின்பு 10வது மாதத்தில் இன்னும் 18 கிலோ கூடியதால் மொத்தம் 28 கிலோவாக எடை கூடியது. ஆரம்பத்தில் தாய் இஸபெல்லுக்கோ தனது மகன் நன்றாக தாய்ப்பால் அருந்துவதால் தான் எடை கூடியுள்ளான் என பூரித்துப் போயிருந்தார்.

மரியோ - இஸபெல் தம்பதியினரின் 3 வயது முதலாவது மகன் லூயிஸ் முன்பு குள்ளனாக தெரிய, மருத்துவர் மருத்துவர்களாய் தேடி ஓடினர். இன்று வரை குழந்தையின் உடல் அசூர வளர்ச்சியடைந்ததன் காரணத்தை யாருமே கண்டுபிடிக்கவில்லை. பொதுவாகவே, மெக்ஸிகோ நாட்டில் தான் உலகளவில் உடல்பருத்த மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் என்ற புள்ளிவிபரங்கள் வேறு தந்தியடிக்கின்றன.

ஒருவழியாக, மரபணு கோளாரால் ஏற்படும் Prader-Willi Syndrome, (a genetic condition in which children have an insatiable appetite and weak muscle tone) என்ற அல்லது கற்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம் என்று கணித்துள்ள மருத்துவர்கள் இந்த அதீத உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்த 555 டாலர் பெறுமானமுள்ள ஊசி மருந்தை பரிந்துரைத்துள்ளனர் ஆனால் விவசாயியான தந்தையின் வருமானமோ மாதத்திற்கு 200 டாலர் பெறுமான மெக்ஸிகோ துட்டு மட்டுமே.

தவழ, நடக்க இயலாத குழந்தையால் பிறர் துணையுடன் சற்று உட்காரவே இயலுமாம் மேலும் பெற்றோர்களாலேயே தூக்க முடியாத குழந்தை லூயிஸின் ஸ்ட்ரோலர் வண்டி கூட எடை அதிகரிப்பால் முறிந்துவிடுமோ என அச்சப்படுகின்றனர். இன்னொருபுறம் குழந்தையின் ஆயுள் இடைநின்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் பெற்றோர்களை வாட்டிவருகின்றது.

Source: AFP / Msn
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.