.

Pages

Saturday, March 31, 2018

திருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் மஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15 வது திருக்குர்ஆன் மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை மாலை அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, திருக்குர்ஆன் மாநாடு குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் தலைமை வகித்தார். அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் வரவேற்றுப் பேசினார். அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தொடக்க உரை ஆற்றினார்.

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15 வது திருக்குர் ஆன் மாநாடு, புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், எதிர்வரும் மே 4, 5, 6 ஆகிய 3 தினங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில், கலந்துகொண்ட அதிராம்பட்டினம் மஹல்லா சங்கங்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகளிடம், திருக்குர்ஆன் மாநாட்டிற்கு ஒத்துழைப்பு, திருக்குர் ஆன் மாநாட்டில் ஒவ்வொரு மஹல்லாவை சேர்ந்த பெண்கள் உட்பட அனைவரும் கலந்துகொள்ள செய்வது, திருக்குர் ஆன் மாநாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்த மாணவர்களும் அதிகமாக கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்த்துக்கொள்வது உள்ளிட்டவை வேண்டுகோளாக வைக்கப்பட்டன.

கூட்டத்தில், சம்சுல் இஸ்லாம் சங்கம், தாஜுல் இஸ்லாம் சங்கம், கடற்கரைத்தெரு, தரகர் தெரு, கீழத்தெரு, புதுத்தெரு, நெசவுத்தெரு, ஆதம் நகர் உட்பட அதிராம்பட்டினம் மஹல்லா சங்கங்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
 

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவை (முழு விவரம்)

அதிராம்பட்டினம், மார்ச் 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்குகளை ஏற்றிச்செல்ல பிரத்தியோக சரக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதிராம்பட்டினம் ரயில் நிலையம்:
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணியில்,
பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டிடம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடைகள், மழை நீர் வடிகால், வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை, டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என கட்டப்பட்டு வருகிறது.

ரயில் நிலைய மேற்கூரை:
மற்றொருபுறம், அதிராம்பட்டினம் ரயில் நிலைய மேற்கூரை அமைப்பதற்காக முதல் கட்டமாக 50 டன் இரும்பில் பணிகள் நடந்து முடிந்தது. தற்போது, 2 வது கட்டமாக 90 டன் இரும்பில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது பிளாட் பாரம் ஆகியவற்றை இணைக்கும்  படிக்கட்டு நடைமேடை மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், 1-வது பிளாட் பாரத்தில், தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்காக 15 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெல்டிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்டவாளம் அமைக்கும் பணி:
மாளியக்காடு முதல் அதிராம்பட்டினம் பகுதி வரையிலான ரயில் பாதையில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரயில் பாதையில் ஜல்லிகள் கொட்டப்பட்டு அதில் ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவை:
மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலகட்டத்தில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து நெல், அரசி, தேங்காய், மீன், கருவாடு மற்றும் உப்பு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மீனவர்கள், வணிகர்கள் பெரிதும் பயனடைந்தனர்.

இந்நிலையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் வந்துசெல்ல தனி பிளாட் பாரம் மற்றும் சரக்குகளை இருப்பு வைக்க கிடங்குகள் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சரக்கு வாகனங்கள் வந்து செல்ல பிரத்தியோகமாக ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் இருந்து ஏரிப்புறக்கரை செல்லும் சாலையை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை)  பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற பின், இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த வழித்தடத்தில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அமைந்துள்ள சுற்றுப்புறபகுதிகளில் ரயில்வே துறைக்கு சொந்தமான போதுமான இடவசதி அமையப்பெற்றுள்ளதால், இந்நிலையத்தில், சரக்கு ரயில் சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இப்பகுதி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் பெரிதும் பயனடைவர். திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் அறந்தாங்கி, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் சரக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

-- முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
 

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு !

அதிராம்பட்டினம், மார்ச்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா அதிராம்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம் தலைமை வகித்து நீர் மோர் வழங்குவதை தொடங்கி வைத்தார். செயலாளர் டி. முஹம்மது நவாஸ்கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மோர் குளிர் பானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சம்சுதீன், வெங்கடேஷ், அய்யாவு, சாகுல் ஹமீது, அப்துல் ஹலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 

ஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் ஒன்று கூடல் ~ SISMA புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 31
ஆஸ்திரேலியாவில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லா  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல் மற்றும் SISMA அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் (30.03.2018) வெள்ளிகிழமை, ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆபரன் பார்க்கில் (Auburn Park) நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஏ.மீரா ஷாஹிப் அமானுல்லா தலைமை வகித்தார். எம்.எஸ் பஷீர் அகமது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அதிராம்பட்டினம் பகுதி மாணவர்களின் உயர்கல்வி / IAS, IPS, lawyer, Policy Makers, இந்திய ஆட்சிப்பணிகளில் சேர்வதற்கான ஊக்கம், இதற்கு, SISMA அமைப்பு வழங்கும் ஒத்துழைப்பு, ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்களுக்கு தேவையான உதவியை வழங்குவது, SISMA அமைப்பின் பதிவு, கூட்டத்தின் தீர்மானங்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட உள்ள  திருமண / சமுதாய மண்டப  கட்டிடப் பணிக்கு உதவுவது குறித்து பேசப்பட்டது.

இதன்பின்னர், SISMA அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக M.A ஹாலித் அபூபக்கர், செயலாளராக M.S  இர்ஷாத் அஹமது, பொருளாளராக M.B இம்ரான் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக M.A ஜெயினுள் ஆபிதீன், M.A முஹம்மது சாலிகு, A  மீராஷாஹிப், A.S ஷர்புதீன், M.S பசீர் அஹமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக, SISMA அமைப்பின் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களின் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கூட்ட முடிவில்,  A.S ஷர்புதீன் அவர்களின் சுவையான மந்தி உணவு பரிமாறப்பட்டன.

இக்கூட்டத்தில், A S சாகுல் ஹமீது, A தையூப்,  S.A  ஷாஹுல் ஹமீது, A  இத்ரிஸ், N. இஸ்ஹாக்,  A.H ஜாவித். M.S  ராஜிக், S H சாஜித், J செய்யது ஹுசைன், AG அஹமது முஹைதீன், A K முபாரக், M.A ரபிக், S அப்துல்லாஹ் M  ஹிஷாம், I பாரிஸ், A  ரியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். மேலும், ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகள், குறிப்பாக, Dubbo விலிருந்து S.S  இர்ஷாத், Brisbane லிருந்து M.A பைசல், Melbourne லிருந்து M.O சாலிம், M.F ஷஃபிக், J அப்துல் ஹமீது, ஜே.எம் யாசிர், ஜே.எம் காமில் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டன.