பட்டுக்கோட்டை ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் 19வது கல்லூரி நாள் விழா 27.03.2018 அன்று கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரி செயலர் பொ.கணேசன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வை.விஜயலெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி தலைவர் மா.மாரிமுத்து தலைமையேற்று இன்றைய விஞ்ஞானம்; மாணவர்கள் மட்டுமல்லாது சமூகத்தை உறவுகளிலிருந்து எவ்வாறு பிரித்து சமூகச் சிதைவை ஏற்படுத்துகிறது என்றும் அதிலிருந்து மாணவர்கள் மீண்டு எவ்வாறு ஆக்கப்பூர்வ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தனது தலைமையுரையை வழங்கி சிறப்பு விருந்தினரை கவுரவித்தார்.
கல்லூரி நாள் சிறப்பு விருந்தினரான நகைச்சுவை செல்வர், பட்டிமன்றப் பேச்சாளர் புலவர் மா.இராமலிங்கம் அவர்கள் தமது சிறப்புரையில்; மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாது பகுத்தறிந்து கற்க வேண்டும். கல்வியோடு நம் பண்பாட்டையும் கற்க வேண்டும். உலகில் மூத்த மொழி நம் தமிழை; மொழி மடடுமல்ல பண்பாடும் மூத்ததே என்றும் மாதா, பிதா, குரு மட்டுமல்லாது மூத்தோர் ஆகியோரை மதித்து நடத்தல் வேண்டும். தோல்வியிலிருந்து பாடங்களை கற்று வெற்றிக்கான வழிகளை ஏற்படுத்திட ஏட்டுக் கல்வியோடு அனுபவமும் வேண்டும் என்றும் இவற்றை வாழ்க்கையில் கடைபிடித்து இந்தியா மட்டுமல்லாது உலக அரங்கில் இந்தியாவையும், தமிழகத்தையும் நிமிரச் செய்த முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர். அப்துல் கலாம் போன்று மாணவர்கள் வெற்றிப் பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
பின்னர் கல்லூரி நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றோர், பல்கலைக்கழகத் தேர்வில் தர வரிசைப் பட்டியலில் முதல், நான்கு மற்றும் ஏழாமிடங்களை பெற்ற மாணவிகள் ப. நந்தினி வீ. இந்து, மா. ஜனனி, L.S தீபிகா ஆகியோர்க்கு முறையே தங்கம், வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும், பல்கலைக்கழக தேர்வில் 100மூ தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்கள் மற்றும் மகளிர் தின விழா அன்று நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவிகள் ஆகியோர்க்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
விழாவின் நிறைவாக பேரா.பொ.சேகர் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்துப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
படம் விளக்கம்:
பல்கலைக்கழகத் தேர்வில் தர வரிசைப் பட்டியலில் முதல் இடம் பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்திணர் புலவர்.இராமலிங்கம் வழங்கினார். முதல்வர் வை.விஜயலெட்சுமி, தலைவர் மா.மாரிமுத்து மற்றும் செயலர் பொ.கணேசன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.