.

Pages

Saturday, March 24, 2018

சவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந்த விண்கல் காட்சிக்கு வைப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 24
சவுதி அரேபியாவின் ஒரு பெரும் பாலைவன நிலப்பரப்பு ஆளரவமற்ற வனாந்தர பகுதியாகும், இதுவே உலகின் மிகப்பெரிய வனாந்தரமுமாகும், இதற்கு Empty Quarter என்று பெயர்.

இங்கு 1932 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர் ஜான் பில்பை என்பவரிடம் ஒரு வித்தியாசமான கல் துண்டை சவுதியில் வாழும் பிதோயின்கள் ( Bedouins) எனப்படும் நாட்டுப்புற அரபிகள் வழங்கினார். அதைப் பார்த்த ஜான் பில்பை ( British explorer John Philby) அப்போதே ஊகித்துவிட்டார் இது நிச்சயமாக பூமியைச் சேர்ந்த பொருளல்ல என,

தொடர் ஆராய்ச்சியின் மூலம் இந்த விண்கல் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் 'எம்ப்டி குவார்டர்ஸின்' ஓபார் (Wobar area in Empty Quarters) என அழைக்கப்படும் வனாந்தர பகுதியில் விழுந்ததாகும் எனவும் சோதனைகள் மூலம் நிறுவினார்.

பகுதியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட அந்த 3.5 எடையுள்ள விண்கல் பூமியில் விழும்போது ஒரு அணுக்குண்டு வெடிப்பின் போது ஏற்படுவது போன்ற அதிர்வை ஏற்படுத்தியிருக்கும் என கிங் சவுதி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் புவியிலாளர் அப்துல் அஜீஸ் பின் லாபோன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1966 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஊடக புகைப்படக் கலைஞராக விளங்கிய புகழ்பெற்ற தாமஸ் ஜே. ஆபர்குரோம்பி என்பவர் உயர்தன்மையுடைய போட்டோ (High resolution pictures) ஆவணங்களாக உருவாக்கித் தந்துள்ளார். இந்த விண்கல் தற்போது தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.