அதிராம்பட்டினம், மார்ச் 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் 15 வது திருக்குர்ஆன் மாநாடு குழுவினரின் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் தலைமை வகித்து, அறிமுக உரை நிகழ்த்தினார். அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத், செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஏ.ஏ.எம்.எப் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், சிபோல் நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் கலந்துகொண்டார்.
கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் 15 வது திருக்குர் ஆன் மாநாட்டினை, ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், எதிர்வரும் மே 4, 5, 6 ஆகிய 3 தினங்கள் நடத்துவது என்றும், இம்மாநாட்டின் குழுத்தலைவராக ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்கள் அழைப்பு, அதிரை பைத்துல்மால் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீடு, திருக்குர்ஆன் மாநாடு போட்டிகள், நடுவர்கள், போட்டியாளர்கள், வெற்றிபெற்றோருக்கான பரிசுகள், மாநாடு விளம்பரங்கள், மாநாட்டின் செலவீனங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக, அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் வரவேற்றுப் பேசினார். முடிவில், அதிரை பைத்துல்மால் தகவல் தொடர்பு அலுவலர் எம். நிஜாமுதீன் நன்றி கூறினார்.
அடுத்தக்கூட்டம், வரும் மார்ச் 25, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், இஞ்சினியர் ஓ.சாகுல் ஹமீது, முகமது முகைதீன், இ. வாப்பு மரைக்காயர், எம். அப்துல் ஜலீல், அபூபக்கர், பகுருதீன், மேலாளர் ஹாஜா சரீப், ஜலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.