.

Pages

Wednesday, March 21, 2018

மஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிரேட்ஸ் தரையிறக்கம்!

அதிரை நியூஸ்: மார்ச் 21
மஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக தரையிறங்கியது எமிரேட்ஸ்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் புதிய விமான நிலைய முனையம் நேற்று திறக்கப்பட்டதை அடுத்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் போயிங் 777-300ER ரக சிறப்பு விமானம் ஒன்று முதலாவது பயணிகள் விமானமாக நேற்று மாலை 5.55 மணியளவில் தரையிறங்கி சிறப்பித்தது.

அமீரகம் கடைபிடித்து வரும் ஷேக் ஜாயித் சிறப்பு ஆண்டு (Year of Zayed) மற்றும் ஓமன், அமீரகம் இடையே சுமூகமாக நிலவும் 25 ஆண்டுகால விமான போக்குவரத்தை கவுரவிக்கும் வகையிலும் இப்புதிய விமான நிலையத்திற்கு சிறப்பு எமிரேட்ஸ் விமானம் இயக்கப்பட்டது.

துபைக்கும் ஓமனிற்கும் இடையே தினசரி 3 சேவைகளை இயக்குகிறது எமிரேட்ஸ். நேற்று தரையிறங்கிய முதலாவது சிறப்பு எமிரேட்ஸ் விமானத்தில் டாக்கா, தம்மாம் மற்றும் பாக்தாத் நகரங்களிலிருந்து துபை வழியாக வந்த பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். எமிரேட்ஸ் விமானங்கள் மூலம் ஒமானியர்கள் உலகின் சுமார் 150 விமான தடங்களில் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.