.

Pages

Saturday, March 17, 2018

ரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷார்ஜா போலீஸ்!

அதிரை நியூஸ்: மார்ச் 17
ரஷ்யாவைச் சேர்ந்த 7 பெண்கள், 3 ஆண்கள் என வயதானவர்கள் அடங்கிய உம்ரா யாத்திரைக்குழு ஒன்று ரஷ்யாவிலிருந்து பல நாடுகளை பஸ்ஸில் பயணித்து கடந்து ஷார்ஜாவை வந்தடைந்தனர். இங்கு அவர்கள் பயணித்து வந்த பஸ் மேலும் பயணிக்க லாயக்கற்ற நிலையில் பழுதாகியது. பஸ் பழுதானதால் ஷார்ஜாவில் சிக்கிய அப்பயணிகளின் உம்ரா விசாவும் கலாவதியானதால் மேற்கொண்டும் அவர்கள் பயணிக்க இயலாமல் ஷார்ஜாவிலேயே சில நாட்களாக முடங்கியுள்ளனர்.

ரஷ்யா உம்ரா பயணக்குழு பற்றி அறிந்த ஷார்ஜா போலீஸ் அப்புனிதப் பயணிகள் தங்குவதற்கு இடமும், உணவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதுடன் காலாவதியான உம்ரா விசாவை புதுப்பிக்கத் தேவையான ஏற்பாடுகளையும் சவுதி அரேபியாவின் அதிகாரிகளுடன் கலந்து பேசி செய்து வருகின்றனர்.

அல்லாஹ் அந்த புனித உம்ரா பயணிகள் நலமுடன் உம்ரா செய்து திரும்பவும், அவர்களின் உம்ராவையும் ஏற்றுக் கொள்வானாக! மேலும் மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டியுள்ள ஷார்ஜா போலீஸ் மற்றும் இவ்வுதவியின் பின்னுள்ள அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் நல்லருள் புரிவானாக!

தமிழில்: நம்ம ஊரான்
Source: Gulf News 

https://www.facebook.com/GulfNews.UAE/videos/1821276581271925/

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.