.

Pages

Wednesday, March 28, 2018

சவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல் 7 வரை நீட்டிப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச் 28
சவுதி அரேபியாவின் யான்பு நகரின் இன்டஸ்ட்ரியல் பார்க் பகுதியில் நடைபெற்று வரும் 12வது மலர் மற்றும் தோட்டக் கண்காட்சி (12th Flower and Garden Festival) பொதுமக்களின் வருகையும் ஆதரவும் அதிகரித்ததை தொடர்ந்து எதிர்வரும் 2018 ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்வை நடத்தும் யான்பு ராயல் கமிஷன் தெரிவித்துள்ளது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக நெதர்லாந்து நாட்டிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்ட 40 வகையான மலர்கள் விளைவிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மலர்கள் யான்பு நகரின் சூடான பாலைவன தட்பவெப்ப சூழலிலும் மலர்கள் இயல்பாய் மலர்ந்துள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கண்காட்சிக்குப் பின் இம்மலர் செடிகளை யான்பு நகரின் கடற்கரை பூங்காக்கள், சாலைகள், தெருவோரங்கள், பொது பயன்பாட்டுப் பகுதிகள் மற்றும் யான்பு ராயல் கமிஷன் அலுவலக வளாகம் ஆகியவற்றில் மறுநடவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.