.

Pages

Wednesday, March 28, 2018

அதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ~ எம்எல்ஏ சி.வி சேகர் தொடங்கி வைத்தார் !

அதிராம்பட்டினம், மார்ச் 28
இந்திய அரசு உப்புத்துறை சார்பில் உப்பளத் தொழிலாளர் குடும்பத்தினருக்கு பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை மருத்துவ முகாம் அதிராம்பட்டினம் செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜி. அறிவழகன், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிவக்குமார், தேவமணி, முருகேசன், சுதாகர், சீனிவாசன், செந்தில், ஏ. சனோபர் ஜஹான் உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் மற்றும் திருச்சி வாசன் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 200 க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் எடை, கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கினர்.

இம்முகாமில், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்ரமணியன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் மலைஅய்யன், அதிராம்பட்டினம் உப்புத்துறை அலுவலர் பாண்டியன், அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் முகமது தமீம், வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், வார்டு பொறுப்பாளர் ஹாஜா பகுரூதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.