.

Pages

Monday, March 19, 2018

ஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில் சந்திக்க அனுமதி!

அதிரை நியூஸ்: மார்ச் 19
ஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில் சந்திக்க அனுமதி

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு தம்பதியினர் ஓமன் நீதிமன்றத்தில் சிறையிலுள்ள தங்களின் சட்டபூர்வ துணைவர்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை தனிமையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என மனுச் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் சிறையிலுள்ள தம்பதியர்கள் தனிமையில் சந்திப்பது அவர்களது உரிமை. எனவே சிறைத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நிதீமன்றத்தின் உத்தரவின்படி, சிறையிலுள்ள ஆணோ அல்லது பெண்ணோ தங்களது சட்டப்பூர்வத் துணைவர்களை தனிமையில் சந்தித்துக் கொள்ள விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என்றும், தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான சிறப்பு அந்தரங்க இடவசதிகளையும் சிறைத்துறை செய்து தர வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது என்றாலும் அனுமதிக்கப்பட்ட தினத்தில் எவ்வளவு நேரம், எத்தனை நாள் கால இடைவெளியில் சந்திக்கலாம் போன்ற வழிகாட்டல்கள் வெளியிடப்படவில்லை. இது சிறைவாசிகளின் சட்டப்பூர்வ தனிமனித உரிமை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sources: Arab News / Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.