.

Pages

Friday, March 16, 2018

அமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைப்பு !

அதிரை நியூஸ்: மார்ச் 16
அமீரகம், அஜ்மானில் மரணமடைந்த பீகார் வாலிபர் உடல் துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அஜ்மான் : அஜ்மான் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்தார் அன்சாரி (வயது 41) பணிபுரிந்து வந்தார். அவர் ​உயர் ரத்த அழுத்தம் காரணமாக கோமோ நிலையில் அஜ்மான் ஷேக் கலீபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 27.02.2018 மரணமடைந்தார்.

அவர் பணிபுரிந்த நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வரவில்லை. எனவே அவரது சகோதரர் மகபூப் ஆலம்​ துபாய்​ ஈமான் அமைப்பை தொடர்பு கொண்டார்.

ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ். எம். ஹபீபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், துணைப்பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் இந்த பணிகளை துபாய் இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் மேற்கொண்டார்.

இந்த பணியில் சமூக ஆர்வலர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று உடலை அனுப்ப தேவையான ஆவணங்கள் விரைவாக கிடைக்க உதவி செய்தனர். மறைந்த சத்தார் அன்சாரியின் உடல்  வெள்ளிக்கிழமை 16.03.2018 அதிகாலை ஏர் இந்தியா விமானம் மூலம் புதுடெல்லி வழியாக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பணியில் தங்களுக்கு உதவி செய்த சத்தார் அன்சாரியின் குடும்பத்தினர் ​துபாய் ​ஈமான் அமைப்புக்கு நன்றி தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.