.

Pages

Wednesday, March 14, 2018

உலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இடத்தில் அமீரகம்!

அதிரை நியூஸ்: மார்ச் 14
ஏதாவது ஒரு நாட்டிற்குச் செல்வதென்றால் அதற்காக செய்யப்படும் விசா விண்ணப்பங்களும், பாதுகாப்பு சோதனைகளும் பயணிகளுக்கு சடைவை ஏற்படுத்தும் முக்கிய 2 காரணிகளாகும். ஆனால் எமிரேட் பாஸ்போர்ட் உடையவர்களுக்கு அத்தகைய சங்கடங்கள் பெரும்பாலும் நீங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் மதிப்பையும் வலிமையையும் பட்டியலிட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம், ஓரே ஆண்டிற்குள் 11 புள்ளிகளை கூடுதலாக பெற்றதுடன் 140 நாடுகளுக்கு விசா இன்றி பிரவேசிக்கும் உரிமையையும் பெற்றதை தொடர்ந்து அரபு உலகில் முதலாவது இடத்திற்கும், உலகளவில் 27 ஆவது இடத்திற்கும் மதிப்புமிக்க பாஸ்போர்ட் என்ற பட்டியலில் உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு 38 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 45 நாடுகள் அமீரக பாஸ்போர்ட்களின் மீது விசா கெடுபிடிகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து குவைத் பாஸ்போர்ட் அரபுலகில் 2 வது இடத்திலும் சர்வதேச அளவில் 59 இடத்திலும் உள்ளது. குவைத் பாஸ்போர்ட்தாரார்கள் 83 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். 3வது இடத்தில் கத்தார் பாஸ்போர்ட் உள்ளது, 81 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும் என்பதன் வழியாக சர்வதேச அளவில் 61 வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் பஹ்ரைன் பாஸ்போர்ட் உள்ளது, உலகளவில் 65வது இடத்தில் உள்ளதுடன் 75 சர்வதேச நாடுகளுக்கும் விசா இன்றி சென்றுவரலாம்.

சோமாலியா 32, பாகிஸ்தான் 30, சிரியா 28, இராக் 27 மற்றும் ஆப்கானிஸ்தான் 24 நாடுகள் என பட்டியலின் கடைசி வரிசையை நிறைவு செய்கின்றன. ஜப்பானும், சிங்கப்பூரும் இணைந்து உலகின் மிக மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற முதலாவது இடத்தில் உள்ளன.

பாஸ்போர்ட் பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்...  here

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.