அதிரை நியூஸ்: மார்ச் 29
சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 'சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' எனும் விமானம் பறந்து கொண்டிருந்தது. இதில், தாயும், மகளுமாக பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் 60 வயதான தாய்க்கு திடீர் என உடல்நலம் குன்றியதை அடுத்து எகானமி வகுப்பிலிருந்து பிஸ்னஸ் வகுப்புக்கு மாற்றப்பட்டு சிறப்பு முதலுதவிகள் தரப்பட்டன எனினும் அந்த மூதாட்டி சுயநினைவை இழந்தார்.
இந்நிலையில், அவருக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைத்திட வேண்டி விமானத்தை அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தார் விமானி 'கு ஜியான்' (Gu Jian) என்றாலும் அப்போது விமானத்தின் எடை சுமார் 282 டன் இருந்ததால் தரையிறக்க முடியாதிருந்ததை அடுத்து வான்வெளியிலேயே சுமார் 30 டன் பெட்ரோலை திறந்துவிட்டார் விமானி.
தரையிறக்கத்திற்கு ஏதுவாக விமானத்தின் எடை குறைந்ததை அடுத்து சிறிய விமான நிலையமான அலஸ்கா துறைமுக விமான நிலையத்தில் (The Ted Stevens Anchorage International Airport in Alaska) தரையிறக்கப்பட்டு மூதாட்டியும் மகளும் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அடுத்த நாள் அவர்கள் இருவரும் நலமுடன் நியூயார்க் புறப்பட்டுச் சென்றனர்.
இதற்கிடையில், அலஸ்காவில் தரையிறங்கிய சீன விமானத்திற்கு மீண்டும் பெட்ரோல் நிரப்பப்பட்டு சுமார் 6 மணிநேர தாமதத்திற்குப் பின் நியூயார்க் புறப்பட்டுச் சென்றது. சீன விமானியின் சமயோசித மனிதாபிமானச் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
Source: FOX News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.