.

Pages

Wednesday, March 14, 2018

அமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 50% தள்ளுபடி சலுகை!

அதிரை நியூஸ்: மார்ச் 14
அமீரக பொருளாதார அமைச்சகத்தின் (Ministry of Economy) முயற்சியின் கீழ் நாடு முழுவதுமுள்ள சுமார் 600 சில்லறை விற்பனைக் கடைகளில் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பல உணவுப் பொருட்களின் விலையிலிருந்து சுமார் 50% வரை தள்ளுபடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2018 மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்வு தினம் (International Day of Happiness) அனுசரிக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து மார்ச் 20 துவங்கி ஏப்ரல் 20 வரை ஒரு மாத காலத்திற்கு இச்சிறப்பு தள்ளுபடி விற்பனையை அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமீரக பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன் பெரும்பாலான சில்லறை விற்பனை கடைகளுடன் நாடு முழுவதும் பல கிளைகளுடன் செயல்படும் கேர்ரிபோர் (Carre four), லூலூ (Lulu) மற்றும் கோ-ஆபரேட்டிவ் ஸ்டோர்களும் (Co-operative stores) இதில் பங்குபெறும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்வேறு சில்லறை கடைகளை கல்ப் நியூஸ் பத்திரிக்கை அணுகிய போது இதைப் பற்றிய தகவல் ஏதும் வரவில்லை என தெரிவித்துள்ளன. கேர்ரிபோர் மற்றும் லூலூ சார்பாக இதுவரை யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.