.

Pages

Wednesday, January 9, 2019

தஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வரை சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம்!

தஞ்சாவூர் மாவட்டம், சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் 10.01.2019 முதல் 21.03.2019 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பொதுக் காலக் கடன் திட்டம்/தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் முகாம் 10.01.2019 அன்று தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 24.01.2019 அன்று திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்திலும், 31.01.2019 அன்று பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 07.02.2019 அன்று ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14.02.2019 அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21.02.2019 அன்று பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 28.02.2019 அன்று பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 07.03.2019 அன்று கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14.03.2019 அன்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21.03.2019 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் சிறுபான்மையினர் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும், கிராமப்புறங்களில் வசிப்பவராகயிருப்பின் ஆண்டு வருமானம் ரூ.81,000க்குள்ளும், நகர்ப்புறங்களில் வசிப்பவராகயிருப்பின் ஆண்டு வருமானம் ரூ.1,03,000க்குள்ளும் இருக்க வேண்டும்.  ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கான கடன் பெறும் திட்டத்தின் கீழ் பயன் பெற குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.  மேலும், மகளிர் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.