எதிர்வரும் ஜனவரி 11 ஆம் தேதி ராகுல் காந்தி அமீரகத்திற்கு முதன் முதலாக வருகை தரவுள்ளது அறிந்ததே. அவருடைய சுற்றுப்பயணத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் குறித்து அதன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் வருகை அரசியல் நோக்கமுடையதல்ல என்றும் மகாத்மா காந்தியின் 150 வருட நினைவை போற்றுவது' மற்றும் அமீரகத்தில் இந்தியத் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து ஓர் சிறப்பு ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு செய்து எடுத்துரைக்கும் விசயங்களை இந்திய பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதுமே நோக்கம் என தெரிவித்துள்ளனர்.
துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் சுமார் 25,000 இந்தியர்களை சந்தித்து உரையாற்றவுள்ளார் ராகுல் காந்தி. இந்நிகழ்ச்சிக்கு அமீரகம் முழுவதிலிருந்தும் வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் மால் ஆப் தி எமிரேட்ஸ் மற்றும் இன்டர்நெட் சிட்டி ஆகிய மெட்ரோ நிலையங்களிலிருந்தும் இலவச ஷட்டில் பஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்வது அவசியம்.
ஆன்லைன் முன்பதிவு மற்றும் பஸ் வசதிகள் குறித்து அறிந்து கொள்ள...
https://www.rginuae.com/
https://www.rginuae.com/transportation
ராகுல் காந்தி அவர்களின் தற்போதைய அமீரக சுற்றுப்பயண விபரங்கள்:
ஜனவரி 11 வெள்ளிக்கிழமை: துபை நிகழ்ச்சிகள்
1. இந்தியத் தொழிலாளர்களை துபை லேபர் கேம்ப் பகுதியில் சந்திக்கின்றார்.
2. இந்திய வர்த்தகர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவை சந்திக்கின்றார்.
3. பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து உரையாடுகின்றார்.
4. துபை கிரிக்கெட் மைதானத்தில் இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றுகின்றார்.
குறிப்பு:
துபை கிரிக்கெட் மைதானத்தில் பகல் 2 மணிமுதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். 4 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கும். பொதுக்கூட்டம் துவங்குமுன் பல்வேறு இந்திய மொழிக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இரவு 8 மணியளவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்.
ஜனவரி 12 - சனிக்கிழமை: அபுதாபி நிகழ்ச்சிகள்
1. அமீரக அமைச்சர்களுடன் சந்திப்பு
2. இந்திய வர்த்தகர்களுடன் சந்திப்பு
3. ஷேக் ஜாயித் மஸ்ஜிதுக்கு சுற்றிப்பார்க்க வருகை.
குறிப்பு:
இந்தியன் சோஷியல் சென்டரில் ராகுல் காந்தி இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து தற்போது எந்த தகவலையும் காணவில்லை. ஒருவேளை இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
Sources: Khaleej Times & Arabian Business
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.