.

Pages

Wednesday, January 23, 2019

தஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு 31.01.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் பயன் பெற விண்ணப்பம்; செய்வதற்கான கடைசி நாளாக 18.01.2019ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 31.01.2019 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை  5.00 மணி வரை விண்ணப்பங்களை இலவசமாக பெற்று 31.01.2019 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பெற்ற அலுவலகத்திலேயே உரிய இணைப்புகளுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.