.

Pages

Wednesday, January 16, 2019

சவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைப்பு!

அதிராம்பட்டினம், ஜன.16
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செபாஸ்டியன். இவரது மகன் ஆரோக்கியசாமி (வயது 41). இவர் சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள தனியார் கிளினிங் நிறுவனமொன்றில் ஊழியராக கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி அனிதா, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிச.22 ந் தேதி பணியின்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரோக்கியசாமி 
இதையடுத்து, இவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான உதவியை இறந்தவரின் உறவினர்கள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக அமைப்பினரிடம் முறையிட்டு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதன் அடிப்படையில், தமுமுக அமைப்பைச் சேர்ந்த மீமிசல் நூர் முகமது, திருப்பூண்டி அப்துல் ஹமீது ஆகியோர் இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசின் சட்டத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை இந்தியா அனுப்புவதற்கான  ஏற்பாட்டினை தீவிரமாக மேற்கொண்டனர்.

இதையடுத்து, ஆரோக்கியசாமியின் உடல் விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அவ்வமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் ரபீக், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா உள்ளிட்ட அவ்வமைப்பினர், இறந்த உடலை அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்துச்சென்று முதல்சேரி கிராமத்தில் உள்ள ஆரோக்கியசாமி மனைவி அனிதாவிடம் இன்று புதன்கிழமை காலை பத்திரமாக ஒப்படைத்தனர். மதம் கடந்த மனிதநேயப் பணிக்கு தமுமுக அமைப்பினருக்கு ஆரோக்கியசாமி குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.