.

Pages

Tuesday, January 8, 2019

தஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க அழைப்பு!

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மகளிர் பயன் பெற உரிய விண்ணப்பங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மேம்பாட்டிற்கென்று பல முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உழைக்கும் மகளிர் பயன்பெறும் பொருட்டு பெண்கள் தங்கள் பணியிடம் (ம) பணி சார்ந்த பிற இடங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க 50ு மானியம் வடிங்கும் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தினை அறிவித்திருந்தார்,

2017-18 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில். தற்பொழுது 2018-19 ஆண்டிற்கான இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் ஆண்டு வருமானம் ஈட்டும் எட்டாம் வகுப்பு படித்த (தேர்ச்சி / தோல்வி) ஓட்டுநர் உரிமம் உள்ள 18 முதல் 40 வயது வரையிலான உழைக்கும் மகளிர் திட்ட விதிகளுக்குட்பட்டு ஒரு குடும்பத்தில் ஒரு நபர் பயன்பெறலாம்.

125 CC-க்கு மிகாத என்ஜின் திறன் வரை கொண்ட Gearless/ Auto Geared 01-01-2018 க்கு பிறகு தயாரிக்கப்பட்ட புதிய இருசக்கர வாகனம் வாங்கிட அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000- இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும், மாற்றுத்திறனாளி மகளிர் மு்ன்று சக்கரம் பொருத்திய வாகனம் வாங்க மானியத்தில் 25% தொகை கூடுதலாக (ரூ.31250) வழங்கப்படும்,

தகுதியுள்ள மகளிர் பயன்பெற உரிய விண்ணப்பங்களை அவரவர் பகுதிகளுக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரு்ராட்சி அலுவலகம், நகராட்சி - மாநகராட்சி அலுவலங்களில் 08-01-2019 முதல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்,

முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட அலுவலகங்களிலேயே 18-01-2019 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிராம - நகர- மாநகர அளவிலான சரிபார்ப்பு குழு மூலம் சரிபார்க்கப்பட்டு, மேலாய்வு செய்து மாவட்ட அளவிலான நகர்புறம்- ஊரக தேர்வுக் குழுவினரால் 2011 மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்படும், உரிய தகுதிகள் கொண்டோர் 18-01-2019க்குள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.