.

Pages

Thursday, January 10, 2019

அபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019 வரை இலவசமாக பயணிக்கலாம்!

அதிரை நியூஸ்: ஜன.10
அபுதாபியின் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019 வரை இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் முழுமையாக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த முதலாவது மின்சக்தி பேருந்து கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி முதல் பரீட்ச்சார்த்தரீதியில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அதிகாரபூர்வமாக அபுதாபியின் பொது போக்குவரத்து கழகத்தில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது என்றாலும் எதிர்வரும் 2019 மார்ச் மாதம் முடியும் வரை முற்றிலும் இலவசமாகவே பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியின் மத்திய பேருந்து நிலையம், மஸ்தார் மற்றும் அபுதாபி மரீனா மால் இடையேயான 6 நிறுத்தங்களுக்கு இடையே இந்த மின்சக்தி பேருந்து இயக்கப்படுகின்றது. 30 இருக்கைகளுடன் இயங்கும் இந்த பஸ்ஸின் பேட்டரிகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ தூரத்திற்கு பேருந்தை தொடர்ந்து இயக்கலாம் என்பதுடன் இதன் பேட்டரிகள், குளிர் சாதனங்கள், விளக்குகள் உள்ளிட்ட அனைத்து துணை மின் சாதனங்களும் பஸ்ஸின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரியஒளி மின்தகடுகள் மூலமே சார்ஜ் செய்யப்பட்டு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.