பேராவூரணி ஜன,27-
பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி சனிக்கிழமை அன்று சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பேராவூரணி பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் முன்னிலையில்
தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து, பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தூய்மை பாரதம்-திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிப்பதற்காக துப்புரவு தொழிலாளர்கள் பயன்படுத்த ஏதுவாக ரூ 2.5 இலட்சம் மதிப்பீட்டில் 7 மூன்று சக்கர சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 13 இலட்சம் மதிப்பீட்டில் ஆதனூரில் அமைக்கப்பட்டுள்ள, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஆழ்துளைக்கிணறுடன் இணைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில கயறு வாரியத்தலைவர் எஸ்.நீலகண்டன், பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் உ.துரைமாணிக்கம், ஆர்.பி.ராஜேந்திரன் மற்றும் பால்.ஏ.பக்கர், கோவி.இளங்கோ, கொன்றை கணேசன், எஸ்.வி.பி.ரவிசங்கர், பாசறை கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.