பட்டுக்கோட்டை, ஜன.27
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் சனவரி மாத கூட்டம் இன்று 26.01.2019 சனிக்கிழமை பட்டுக்கோட்டை நிலா ஸ்கூலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் என். ஜெயராமன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இரயில் சேவைகளை தொடங்க வேண்டும்.
காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழித்தடத்தில் கீழ்க்கண்ட இரயில்களை இயக்க வேண்டும்:
சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு இரயிலை மீண்டும் இத்தடத்தில் இயக்கவேண்டும். மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி, நாகூர் - திருவாரூர் - காரைக்குடி, திருவாரூர் - விருதுநகர் பயணிகள் இரயிலை தினந்தோறும் இத்தடத்தில் இயக்க வேண்டும்.
சென்னை - இராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் விரைவு ரயிலை இயக்க வேண்டும். அதிகாலையில் இருமுனைகளில் இருந்தும் இந்த இரயில்களை இயக்க வேண்டும்.
இராமேஸ்வரம் - திருப்பதிக்கு வாரம் இருமுறை விரைவு இரயில், கன்யாகுமாரி /இராமேஸ்வரத்திலிருந்து வட மாநிலங்களில் இருந்து இப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மும்பை வழியாக அஜ்மீருக்கு பட்டேல் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் விட வேண்டும்.
திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணி, காரைக்காலுக்கு வாரம் இருமுறை விரைவு ரயில், கன்யாகுமாரி - ஹௌராவிற்கும், கன்னியாகுமரி - ஜம்முதாவிக்கு மகாத்மா காந்தி பெயரில் விரைவு இரயில், இராமேஸ்வரம் - புதுடெல்லிக்கு அப்துல் கலாம் பெயரில் விரைவு இரயில், சென்னை - மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயிலை வாரம் இருமுறை இத்தடத்தில் இயக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, இரயில்வே அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், இரயில்வே உயர் அதிகாரிகள் ஆகியோரை நேரில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் வ. விவேகானந்தம், துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன், துணை செயலாளர் ஜே.பிரின்ஸ் விஜயகுமார், பொருளாளர் பி. சுந்தரராஜூலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.