.

Pages

Saturday, January 26, 2019

துபையில் தமுமுக சார்பில் இரத்த தான முகாம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன.26
70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு UAE துபாய் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 25-வது இரத்த தான முகாம் தமுமுக அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில், தமுமுக அமீரக துணை தலைவர் AS.இப்ராஹிம், தமுமுக அமீரக பொருளாளர் Dr.அப்துல் காதர், தமுமுக அமீரக துணை செயலாளர் கஜ்ஜாலி ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை 25.01.2019 காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் குமார் அமீரக திமுக தலைவர் S.S.Meeran, Emirates Red Crescent Community Awareness Co ordinator ஃபைஸ் முகம்மது, முஸ்லிம் லீக் அமீரக பொதுச்செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், தொழிலதிபர் இளையான்குடி அபுதாஹீர், டாக்டர் முகையதீன், தொழிலதிபர் ஹசீனா, தொழிலதிபர் பழஞ்சூர்  செல்வம், காங்கிரஸ் பொருப்பாளர் ஜுனைத், முஸ்லிம் லீக் துபாய் மண்டல பொருப்பாளர் பரக்கத் அலி, அமானுல்லாஹ், சகோ. நியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.

இதில் தமுமுக துபாய் மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது, தமுமுக துபாய் மண்டல செயலாளர் ஷேக் தாவுது,மமக துபாய் மண்டல செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், தமுமுக துபாய் மண்டல துணை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மக்கள் செய்தி தொடர்பாளர் திருச்சி பிலால்,மருத்துவ அணி செயலாளர் அதிரை ஷேக்,துபாய் மண்டல தமுமுக ஊடக பிரிவு செயலாளர் முத்துப்பேட்டை பைசல் மற்றும் மண்டல,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அயல்நாட்டிலும் தமுமுக சேவைகளை இந்திய தூதரக அதிகாரி பாராட்டினார். தமுமுக நடத்திய இரத்த தான முகாம்கள் அனைத்து மக்களுக்கும் மிக அவசியமானதும் இக்காலகட்டத்தில் மிக முக்கியமானதும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.