தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ரயிலடியில் 9வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (25.01.2019) கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.
வாக்காளர் விழிப்புணர்வு தினப் பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ மாணவியர்கள் ஏந்திச் சென்றனர். இப்பேரணி ரயிலடியில் தொடங்கி ஆற்றுப்பாலம், பழைய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மகாலில் நிறைவு பெற்றது.
பின்னர், சங்கீத மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாணவ மாணவியர்களும், பொது மக்களும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்துரையாடினார்.
அப்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது :
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளான 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள இளம் வாக்காளர்களை சிறப்பிக்கும் நோக்கத்துடன் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு புதிய வாக்காளர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.
தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
அதன் பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தஞ்சாவூர் வட்டாட்சியர் அருணகிரி, தேர்தல் தனி வட்டாட்சியர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.