அதிரை நியூஸ்: ஜன.26
புரிதலில்லாத அரசின் பொருளாதாரக் கொள்கையினால் பொலிவிழந்து கிடக்கும் இந்தியப் பொருளாதார நிலையை எண்ணி வருந்தும் நிலைதான் இன்றுள்ளது. ஏழை எழ்மையிலிருந்து மீள வழி தெரியாது விழி பிதுங்கி நிற்கிறான். பணக்காரன் மேலும் மேலும் பணம் குவித்துப் படாடோபமாக வாழ்கிறான்.
'கிரெடிட் குய்ஸ்' என்ற அமைப்பானது புள்ளி விவரத்தோடு சுட்டிக்காட்டியுள்ளது நம் கவனத்தை ஈர்க்கிறது. நாட்டின் 10 சதவீதப் பணக்காரர்கள் வசம் நாட்டின் மொத்த சொத்தில் 77.4 சதவீதம் இருக்கிறது. 60 சதவீதம் ஏழைகளின் வசம் நாட்டின் மொத்த சொத்தில் 4.7 சதவீதம் மட்டுமே உள்ளது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும், 92 சதவீதப் பெண் தொழிலாளர்களும் மாதம் ரூ.10,000 க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைத் தாங்கிக்கொள்ள இயலாத நிலையில் ஏழைகள் உள்ளனர். 1960 லிருந்து 2014 வரை 54 ஆண்டுகளில் விலைவாசி உயர்வுடன் ஒப்பிடும்போது, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மட்டும் 24 சதவீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டிருகிறது. 2014 க்கு முன்னர் 5,569 என இருந்த நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் தற்போது 6,893 என உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் இத்தகைய பொருளாதார நிலை ஒருபுறம் இருக்க, இந்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது.
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் மரணமடைந்த பாதசாரிகளின் எண்ணிக்கை மட்டும் 20,467. அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் 54 பாதசாரிகள் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். இதன் மாநிலவாரியான கணக்கெடுப்பில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் 2017 ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,507. அடுத்த இரு இடங்களில் மகாராஷ்டிரமும், ஆந்திரமும் முறையே 1831, 1379 என்ற எண்ணிக்கைகளோடு உள்ளன. இப்புள்ளி விவரத்தில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய உயிரிழப்புகளுக்கான காரணம் என்ன? சாலைகளைக் கடக்கின்ற பாதசாரிகளுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாமை, அகலமான, நேர்த்தியான, பாதுகாப்பான, மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்துகின்ற வகையில் நடைபாதைகள் அமையப்பெறாமை, நடைபாதை ஆக்கிரமிப்புகள் போன்றவற்றைக் கூறலாம். இது தொடர்பாக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டாமா?
கவிஞர் ஷன்முக சுப்பையா என்பவர் எழுதிய கவிதை ஒன்று அண்மையில் படிக்க நேர்ந்தது.
தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட நாட்டில் நிலவும் அவல நிலைகள் ஒருபுறம் இருந்தாலும், நம் குடியரசு நமக்கு கசந்துவிடக் கூடாது. அது அவசியம் கொண்டாடப்பட வேண்டும். அதற்கான காரணங்கள் பல கூறலாம். 300 ஆண்டு கால அடிமை வாழ்விலிருந்து நாட்டை மீட்க மேற்கொண்ட விடுதலைப் போரின்போது உயிர் துறந்த, சிறைபட்ட நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காக நாம் நம் குடியரசைக் கொண்டாட வேண்டும். நமக்கான அரசை நாமே தேர்ந்தெடுக்க நமக்களிக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமை, நிர்வாகம் மற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் மக்களுக்கு எதிரான நிலைபாட்டை மேற்கொள்ளும்போது, நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காண்பதற்கான உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, வாழ்வுரிமை போன்ற எத்தனையோ உரிமைகள் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியே நமக்குத் தரப்பட்டுள்ளதே அதற்காக நாம் நம் குடியரசைக் கொண்டாடத்தான் வேண்டும்.
ஒவ்வோராண்டும் ஜனவரி 26 அன்று குடியரசைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள்.
எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

"அணைக்க ஒரு அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்க சற்றும் வசதியில்லாத வீடு
உண்ண என்றும் உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும் ஏனோ உலகம் கசக்கவில்லை"
தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட நாட்டில் நிலவும் அவல நிலைகள் ஒருபுறம் இருந்தாலும், நம் குடியரசு நமக்கு கசந்துவிடக் கூடாது. அது அவசியம் கொண்டாடப்பட வேண்டும். அதற்கான காரணங்கள் பல கூறலாம். 300 ஆண்டு கால அடிமை வாழ்விலிருந்து நாட்டை மீட்க மேற்கொண்ட விடுதலைப் போரின்போது உயிர் துறந்த, சிறைபட்ட நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காக நாம் நம் குடியரசைக் கொண்டாட வேண்டும். நமக்கான அரசை நாமே தேர்ந்தெடுக்க நமக்களிக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமை, நிர்வாகம் மற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் மக்களுக்கு எதிரான நிலைபாட்டை மேற்கொள்ளும்போது, நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காண்பதற்கான உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, வாழ்வுரிமை போன்ற எத்தனையோ உரிமைகள் நம் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியே நமக்குத் தரப்பட்டுள்ளதே அதற்காக நாம் நம் குடியரசைக் கொண்டாடத்தான் வேண்டும்.
ஒவ்வோராண்டும் ஜனவரி 26 அன்று குடியரசைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள்.
எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.