.

Pages

Saturday, January 19, 2019

திருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை!

அதிராம்பட்டினம், ஜன.19
அதிராம்பட்டினம் அருகில் உள்ள வாட்டாகுடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த தில்லையம்மாள். இவரது மகள் எஸ்தர்ராணி (18). இவருக்கும், அதிராம்பட்டினம் அடுத்து ஏரிப்புறக்கரை கண்டியன் கொல்லையைச் சேர்ந்த மதியழகன் மகன் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், எஸ்தர்ராணி வியாழக்கிழமை காலை கணவர் வீட்டு உத்திரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தில்லையம்மாள் அளித்த புகாரில், திருமணத்திற்கு பிறகு மருமகன் பிரகாஷ், அவரது தாய், தம்பி ஆகியோர் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே எஸ்தர்ராணி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். அதன்பேரில், அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

எஸ்தர்ராணி திருமணமான 3 மாதங்களில் இறந்துள்ளதால் அவர் சாவுக்கு வரதட்சணை துன்புறுத்தல் காரணமா? என்பது குறித்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் (பொ) கோ.தவச்செல்வம் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.