.

Pages

Wednesday, January 9, 2019

குவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்சி!

அதிரை நியூஸ்: ஜன.09
குவைத்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தை வாசிக்கும் தலைமுறையாக வார்த்தெடுக்கும் பணியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (கே-டிக்) பல்வேறு முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை உள்ளடக்கிய பொது நூலகம் ஒன்றினை சங்கத்தின் அலுவலகத்தில் உருவாக்கி தமிழ் சமுதாயத்திற்கு பெருந்தொண்டினை ஆற்றி வருகின்றது இச்சங்கம். வாசிப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், சமுதாய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவும் இதுவரை பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்தியும், வெளியிட்டு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில், பன்னூல் ஆசிரியர் அபூ ஷேக் முஹம்மத் எழுதியுள்ள "கரையேறாத அகதிகள்" நூல் அறிமுக நிகழ்ச்சி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் ஹச். முஹம்மது நாஸர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ வாசிப்பின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்து நூல் அறிமுகவுரையாற்றினார். பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ நூல் குறித்த விபரங்களை விளக்கியதுடன் நூலாசிரியருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி ஜும்ஆ பேருரையாற்றினார். இணைப் பொருளாளர் நூலை வெளியிட சங்கத்தின் ஆலோசகர்களும், சமூக நல ஆர்வலர்களும், சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் தற்கால சூழலில் பர்மா முஸ்லிம்கள் உலக அகதிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறிவைத்து வேட்டையாடப்படும் சூழலில் அவர்கள் குறித்தான அதி முக்கிய செய்திகளை ஆறாம் நூற்றாண்டு முதல் ஆங்சங் சுகியின் தற்போதைய ஜனநாயக தேர்தல் வெற்றி வரையில், அவர்களின் புவியியல், வாழ்வியல், வரலாற்று சம்பவங்கள், இனப்படுகொலைகள், அகதிகளான வரலாறு, கடல்களில் தத்தளித்த சோக நிகழ்வுகள், அகதிகள் முகாம்கள் உள்ளடக்கிய ஆவணத் தொகுப்பு "கரையேறாத அகதிகள்" என்ற நூல் ஆகும். இந்த நூலை வாசித்த பிறகு சர்வதேச அரசியலில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கான தீர்வு எது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.