.

Pages

Sunday, January 13, 2019

பிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், ஜன.13
அதிராம்பட்டினம், பிலால் நகர் ஜாமஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு பிலால் (ரலி) பள்ளிவாசலில் இன்று (13-01-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பிலால் (ரலி) பள்ளிவாசல் முத்தவல்லி எஸ்.எம்.ஏ அகமது கபீர் தலைமை வகித்தார். பள்ளிவாசல் இமாம் ஹாப்சா முகமது அபூபக்கர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக எஸ். முகமது முகைதீன், செயலாளராக எம். சாகுல் ஹமீது, பொருளாளராக எம். நிஜாமுதீன், துணைத் தலைவர்களாக அஸ்ரப் அலி, ஜமால் முகமது, முகமது தமீம், துணைச் செயலாளர்களாக எம்.ஆர் கமாலுதீன், ரபீக், இப்ராஹீம் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக முகமது அபூபக்கர், ஹபீப் ரஹ்மான், இப்ராஹீம், இப்ராஹிம்ஷா, நெய்னா முகமது, (காய்கறி), கமாலுதீன், பசீர் அகமது, முகமது காசிம், அபுல் ஹசன், தாஹா, யூசூப், ரஹ்மத்துல்லாஹ் (தம்பு), அய்யூப்கான், நெய்னா முகமது (டீ கடை), பிச்சை (எ) அமானுல்லாஹ், சித்திக், உசேன், சுபீர், சேக் தாவூது ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஓர் ஆண்டு ஆகும். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.