.

Pages

Saturday, January 12, 2019

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து!

பட்டுக்கோட்டை: ஜன.12
பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி முதல், பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே வார இரு முறை மீண்டும் பயணிகள் ரயில் சேவை  தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் போக்குவரத்து சில நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொங்கல் திருநாளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் ரயில் போக்குவரத்து ஜனவர் முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

வாரந்தோறும் திங்கள், வியாழக்கிழமையில் காரைக்குடியிலிருந்து புறப்படும் இந்த ரயில் (வண்டி எண் 06856) காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு கண்டனூர், புதுவயல், பெரியகோட்டை, வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயங்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு அதிரை நியூஸ் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பகல் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை அடையும்.

எதிர் மார்க்கத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் ரயில் (வண்டி எண் 06855) மாலை 4.20 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். ஜூலை 4 ஆம் தேதி வரை இந்த பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஒட்டங்காடு அதிரை நியூஸ் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று?????????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.