.

Pages

Saturday, January 26, 2019

குடியரசு தின விழாவில் ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி: ஆட்சியர் வழங்கினார் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2019) நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தேசியக் கொடியினை ஏற்றி வைத்து 313 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே  61 இலட்சத்து 45 ஆயிரத்து 990 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூர் ஆயுத படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல் துறையின் அணி வகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது  வாரிசுதாரர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  கௌரவித்தார்.

பின்னர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பிலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.84,850 மதிப்பிலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.17,456 மதிப்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.6,50,000 மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.1,85,786 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 53 பயனாளிகளுக்கு ரூ.22,92,000 மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.8,39,459 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.4,19,000 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.32,14,040 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 01 பயனாளிக்கு ரூ.11,603 மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.25,93,000 மதிப்பிலும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூ.18,81,400 மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3,89,003 மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.9,81,000 மதிப்பிலும், தாட்கோ நிறுவனத்தின் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.21,74,905 மதிப்பிலும், மீன்வளத்துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.3,62,488 மதிப்பிலும் ஆக மொத்தம் 313 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 61 இலட்சத்து 45 ஆயிரத்து 990 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 92 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி கௌரவித்தார்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.