.

Pages

Tuesday, January 8, 2019

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்டுவாடா!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை  ரூ.243 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் மற்றும் மதுக்கூர் ஒன்றியம், வேளாண்மை உதவி இயக்குநர், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில்  ஆய்வு மேற்கொண்டு இதுவரை வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் குறித்து கேட்டறிந்து  நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது;

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், பயிர்கள், தென்னை மரங்கள், உயிரிழந்த கால்நடைகள், உயிரிழந்த நபர்கள் ஆகியோருக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலினால் உயிரிழந்த 17 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ. 1 கோடியே 70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலினால் சேதமடைந்த 1,30,410 வீடுகளின் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.70.50 கோடி நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.  மேலும், இதர பாதிக்கப்பட்ட வீடுகளின் குடும்பதாருக்கு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கஜா புயலின் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்கள், வல்லம் மற்றும் கட்டுமரங்கள் முழுமையாக சேதமடைந்த மீனவ குடும்பங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வீதம் 1,19,315 குடும்பங்களுக்கு ரூ.59.65 கோடி வங்கிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட காரணங்களினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசின் மூலம் 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் நாளது தேதி வரை 1,08,772 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் பெட்டகம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
.
கஜா புயலினால் உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக வழங்க இரண்டு கட்டமாக ரூ. 1.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வட்ட வாரியாக பிரித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட படகுகள், வல்லம் படகுகள், நாட்டுப் படகு மற்றும் மீன்பிடி வலைகளுக்கு ரூ. 17.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ரூ. 4.72 கோடி நிவாரண தொகை 1,508 மீனவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தென்னை, கரும்பு, நெல், மக்காச்சோளம், வாழை, வெற்றிலை தேரப் காய்கறி பயிர்கள் மற்றும் மர பயிர்கள்  ஆகியவற்றிற்கு நிவாரணம் வழங்க ரூ.508.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  நிதி ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து, நாளது தேதி வரை 14,512 பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.103.90 கோடி நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு ரூ.3.29 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. இது வரை 2,792 பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு பயிர் ழேப்பீட்டு நிவாரணத் தொகை ரூ.1.49 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

கஜா புயலினால் பாதிப்படைந்து அதற்குரிய நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்டோர்கள் தொடர்புடைய அலுவலர்களிடமோ அல்லது தங்களின் கிராமங்களில் செயல்படும் கஜா புயல் சேத மதிப்பீட்டு மையத்திலோ மனுக்களாக கொடுத்து உரிய நிவாரணத்தை  பெற்றுக்  கொள்ளலாம்.  இவ்வாறு   மாவட்ட  ஆட்சித்  தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆய்வின் போது, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார், பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், வட்டார வேளாண் அலுவலர் நவீன் மற்றும் வேளாண் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.