.

Pages

Wednesday, January 23, 2019

பேராவூரணி அருகே கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு ~ ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், வளபிரமன்காடு ஊராட்சியில் அமைந்துள்ள கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு ஏற்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (23.01.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட வளபிரமன்காடு ஊராட்சியில் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான  தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 40 அடி ஆழ கிணற்றில் 1982ம் ஆண்டு 100 அடி அளவில் போர்வெல் போடப்பட்டது.  அதில் கடந்த ஒரு மாதமாக அதிக அளவில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்கி வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், புவியியல் துறை அலுவலர்களை கொண்டு கொந்தளிப்பு ஏற்படும் கிணற்றினை ஆய்வு செய்யுமாறு வருவாய்த்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, வட்டாட்சியர் பாஸ்கரன், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.