தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயல் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (18.01.2019) ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கஜா புயல் நிவாரணப்பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, மற்றும் இதர துறை அலுவலர்களிடம் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வரை வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவி தொகையின் விவரங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நிவாரண உதவித்தொகை செலுத்தப்பட்டு மீண்டும் திரும்பிய விவரங்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். திரும்பிய நிவாரண உதவித்தொகையினை மீண்டும் உரிய நபர்களுக்கு செலுத்திடவும், இனம் காணா நிலங்கள் உள்ள விவசாயிகளுக்கு ஆவணங்களின் அடிப்படையில் நிவாரண உதவித்தொகை வழங்கிடவும், கால்நடை இழப்பு ஏற்பட்ட உரிமையாளர்களுக்கு உரிய நிவாரண உதவித் தொகையினை விரைவாக வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், ஒரத்தநாடு மற்றும் பேராவ10ரணி வட்டாட்சியர் அலுவலகங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்;டவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவித்தொகை குறித்த விவரங்களின் பதிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, நிவாரண உதவித்தொகை வழங்கப்பட வேண்டியவர்களுக்கு பணிகளை துரிதப்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கஜா புயல் மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.