.

Pages

Wednesday, January 9, 2019

ஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங்கள்)

தஞ்சாவூர் ஜன,09-
பேராவூரணி அருகே திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கலந்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த ஆவணத்தில்  திமுக சார்பில் புதன்கிழமை அன்று ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளிலும், 'மக்களிடம் செல்வோம்... மக்களிடம் சொல்வோம்.... மக்களின் மனங்களை வெல்வோம்...' என்ற முழக்கத்துடன் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆவணத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஊராட்சி சபைக் கூட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், '' திமுக அரசியலுக்கான கட்சி அல்ல. சமூக மாற்றத்திற்கான, நாட்டு மக்களுக்கான கட்சி... மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய குறைகளை தெரிந்து, அவற்றை  அவற்றை நிவர்த்தி செய்யத் தான் இந்த கூட்டம். மக்களின் குறைகளை மாநில அரசின் கவனத்திற்கு நிர்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாடிவீட்டு அதிமுகவினருக்கு இரண்டு முறை கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்காமல் போனதற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போதும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையும் தான் காரணம்.

விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் சரியாக தண்ணீர் வராத நிலையில் நெல் சாகுபடியை கைவிட்டு, தென்னை சாகுபடி நோக்கி விவசாயிகள் செல்லும் நிலை.... இந்த அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத... மக்கள் விரோத அரசாக உள்ளது. புயல் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஐந்து அமைச்சர்கள் தினசரி காரில் ஊர்வலமாக சென்றனரே தவிர, மக்கள் பாதிப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்யவில்லை. வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கே.அண்ணாதுரை, முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ஆ.பழனிவேலு, முன்னாள் பேரூராட்சி பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி க.அன்பழகன், சேதுபாவாசத்திரம் (வடக்கு) முத்து மாணிக்கம், (தெற்கு) வை.ரவிச்சந்திரன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட கழக பிரதிநிதிகள் ஆவணம் மதிவாணன், சந்திரபோஸ், கோவிந்தராஜ், கே.பாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர் நீலகண்டன், பெருமகளூர் அறிவுமணி, கிளைக் கழகச் செயலாளர்கள் மதி,  அபூபக்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் இரா.திருஞானம், அண்ணாதுரை, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஏ.விகுமாரசாமி, கிளைச் செயலாளர் பெரியசாமி, ஆவணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், கே.அடைக்கலம், திமுக ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் தருவதில் காட்டிவரும் மெத்தனத்தை கண்டிப்பதோடு, வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில்  திமுகவை வெற்றி பெறச் செய்வது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த மாநில அரசை வலியுறுத்துவது ' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.