விவசாயிகள் குறை தீர் கூட்டம் வருகின்ற 29.01.2019 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல்
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் வருகின்ற 29.01.2019 அன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
ஜனவரி 2019 ஆம் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 29.01.2019 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் அமைந்துள்ள பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் புதிய வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் சார்ந்த கருத்துகளை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எனவே, 29.01.2019 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் விவசாயம் சார்ந்த கருத்துக்களை மட்டும் கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.