.

Pages

Tuesday, January 8, 2019

அதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.08
அதிராம்பட்டினம் அடுத்து சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள ராவுத்தன் வயல் ஊராட்சி மறவன் வயல் பகுதியை சேர்ந்தவர் மதி (வயது 32) விவசாயி. இவர் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த இவரது ஆடு இன்று செவ்வாய்க்கிழமை காலை இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில், ஒன்று சாதாரண குட்டியாகவும், மற்றொன்று மனித உருவத்தில் இறந்து பிறந்தது. அக்குட்டியின் உடல் பருமனாகவும், முகம் மனித உருவத்தில் இருந்ததைக் கண்டு மதி அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த அப்பகுதியினர் மனித உருவ ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்றனர். பின்னர், அக்குட்டியை அடக்கம் செய்துவிட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.