அதிரையின் குளங்களுக்கு ஆற்று நீர் திறந்து விடப்பட்டு வழியில் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
அது சமயம், சி.எம்.பி வாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த வாய்க்கால் அகலம் சுருங்கி அதன் இயற்கை தன்மை இழந்து பன்னெடுங்காலமாக ஆற்று நீர் செல்லாததால் கழிவு நீர் கால்வாயை போல் காட்சியளிக்கிறது.
மக்களின் அலட்சியத்தின் காரணமாகவும், ஆட்சியாளர்களின் கவனக்குறைவும் இதன் தன்மை மாறுவதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது.
வீடுகளை எழில் மிகு தோற்றத்தில் கட்டுவதற்கு முயற்சிக்கும் நம்மில் பலர், வீட்டின் சுகாதாரத்தை பேணுவதில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ சுற்றுப்புறத்தின் சுகாதாரத்தை காப்பதில் அலட்சியம் காட்டுவது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
வீட்டை கட்டி முடித்து அதன் கழிவு குழாய்களை சி.எம்.பி வாய்க்காலில் இணைத்ததின் காரணமாக அவ்வாய்க்காலில் கழிவு நீர் மாசு படிந்து, தோண்ட தோண்ட கழிவு நீரின் ஊற்று மாறாமல் ஆழமாக படிந்துள்ளது.
தூர்வாரிய பின்பும் இந்த வாய்க்காலில் கழிவு நீர் கலக்குமானால், இதன் வழியே செல்லக்கூடிய ஆற்று நீர் செக்கடி குளத்திலோ அல்லது ஆலடி குளத்திலோ படிந்து விடும்,
இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு இந்த கழிவு நீருக்காக தனி வடிகாலோ அல்லது பாதாள சாக்கடையோ அமைத்து சுற்றுப்புறச்சூழலை பேணிக்காக்க முயற்சிக்க வேண்டும்.
இதை செய்ய தவறும் பட்சத்தில், பிற்காலத்தில் செக்கடிக்குளத்திற்கோ அல்லது ஆலடி குளத்திற்கோ “செட்டியான் குளத்தின்” நிலைமைதான் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கும் வீண் செலவுகளுக்கும் ஆளாக நேரிடும்,
தயவு செய்து ஆட்சியாளர்களும் குடியிருப்போரும் இதை கவனத்தில் கொண்டு செயல் பட்டு சுற்றுப்புறத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
-அஹமத் தௌபீக்

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், இது பழமொழி, மேலும் உண்மையும்கூட.
சொல்மேல் சொல்லி சொல்லிப் பார்த்தால், மக்கள் மனம் திரும்புமா அல்லது திருந்துமா?
பொறுத்து இருக்க நேரம் இல்லை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சிறந்த சமூகப்பார்வை
ReplyDeleteமக்கள் - மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியத்தை தைரியமாக சுட்டிக்காட்டியதற்கு நன்றி
டிஸ்கி :
இன்னிக்கு ராத்திரி கொசுத்தொல்லை ஜாஸ்தியா ஈக்கிம் :)
இந்த அக்கம் எழுதி இருக்கும் சகோதரர் தௌபீக் அவர்களுக்கு நானும் இன்று cmp லைன் பகுதியில் இருந்தேன்.தூர் வாரும் போது சில விட்டு உரிமையாளர்கள் செய்யும் பணியை தடுத்து கொண்டு இருந்தனர்.சிலர் இழிவாக பேசி கொண்டு வாக்கு வாதத்தில் இடுபட்டு கொண்டு இருந்தனர்.அதிரை பேருராட்சியை குறை சொல்ல வாய்ப்பு இல்லை. நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதி அது.இருந்து சமிபத்தில் அந்த பகுதி சாலையை பேருராச்சி செலவில் மறு சீரமைப்பு செய்தனர்.இது போல் பல நல்ல காரியம் செய்து இருப்பதை நாம் மறுக்க முடியாது.இருபினும் உங்களை போன்றோர் இன்று அந்த பகுதியில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருகிறிர்கள்.நானூம் அங்கு இருந்து கொண்டு தான் இருந்தேன்.உங்களுக்கு துணிவு இருந்தால் நேராடியாக சென்று பேருராட்சி தலைவர் அவர்களை அணுகி விளக்கம் கேட்டு இருக்கலாம்.நீங்கள் சொல்வது போல் குளங்கள் அசுத்தம் ஆகும்.இருந்தும் நமது மக்கள் குளிக்கவோ குடிக்கவோ பயன் பாட்டுக்கு இல்லை.இந்த ஏற்பாடு அனைத்தும் பூமிக்கு தண்ணீர் சென்று தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருபதற்கு தான்.காற்று உள்ள போதே துற்றிகொள் என்ற பல மொழிக்கு ஏற்ப நாம் செயல் பட வேண்டும்.இனி வரும் காலங்களில் ஆட்சியாளர்கள் எப்படி வருவார்கள் என்று தெரியவில்லை இருந்தும் நல்லது செய்ய நினைக்கும் ஆட்சியாளர்களை ஊக்கு உதாசீன படுத்தவேண்டாம். அவலநிலை என்று பதிந்து இருக்கும் நீங்கள் உங்களது நிலையை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்
ReplyDeleteஏம்பா அதிரை ஹாஜி,
Deleteகட்டுரையாளர் பேரூராட்சியை குறை சொல்லப்பா- இப்புடி விசமத்தனமா கொளுத்தி போடாதிங்க
புரியாட்டி கட்டுரையை திரும்ப திரும்ப வாசிங்க
சகோ. அதிரை ஹாஜி அவர்களுக்கு,
Deleteஅல்லாஹ்விற்காக சொல்கிறேன், நீங்கள் உன்மைக்கு புறம்பான செய்தியை பதிர்ந்துள்ளீர்கள், நான் அங்கு வரும்பொழுது ஏற்கனவே சிலர் ஜே.சி.பி ஆபரேட்டரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் அந்த நபரை அழைத்து ஏன் கூலிக்கு வேலை செய்பவரிடம் கேட்கிறீர்கள், நமக்கு தேவையான இந்த திட்டத்தை நிறுத்தாதீர்கள், தேவை இருந்தால் சம்பதப்பட்டவர்களிடம் முறையிடுங்கள் என்று சொன்னேன்.
ஆனால், நீங்களோ உண்மைக்கு புறம்பாக கருத்திடுகிறீர்கள், அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்விற்காக சொல்கிறேன், நான் இந்த நல்ல திட்டத்திற்கு என்றும் ஆதரவானவன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தயவு செய்து உங்கள் உண்மையான பெயரை எழுதவும், இது போன்ற தேவையில்லாத வீண் வதந்திகளை பரப்பவேண்டாம்.
குறிப்பு:
ஆற்று நீர் சம்பந்தமாக அதிரை பைதுல்மாலில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் நானும் பங்கு கொண்டேன் என்பதை இந்நேரத்தில் கூறிக்கொள்ள விரும்பிகிறேன்.
இந்த பதிவு குறித்து கட்டுரையாளர் போதுமான விளக்கத்தை தந்துள்ளார் . பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் தொடருவதால் கருத்து பதியும் வசதி நிறுத்தி வைக்கப்படுகிறது
ReplyDelete