பாடல் வரிகள் : 'கவியன்பன்' அபுல் கலாம்
பாடலை பாடியவர் : 'இளம்பாடகர்' அதிரை ஜாஃபர்
பேரணி முழக்கம் இளையவர் ஒலிக்கப்
.....பெரும்புகழ்ப் பெருநகர் ஆங்குத்
தோரணம் போல கூட்டமாய் வீதி
..தோறுமே பச்சையின் வண்ணம்
வீரமும் தொண்டும் நிறைந்துளப் படையின்.
....வெற்றியைக் குறித்திடும் காட்சி
நேரமும் நெருங்கி வந்தது; வாவா
....நேர்மையின் நிகழ்வினை நோக்கி!
இறப்பிலோ நல்ல நிகழ்விலோ எம்மை
....இறைமறை நபிவழி இஜ்மா
மறந்திடா வண்ணம் நடைமுறை செய்ய
....மாண்புள முன்னவர் கூட்டம்
பிறப்புடன் எம்மைத் தொடந்திடும் மஹல்லா
....பிளவிலாச் சேவையைச் செய்யச்
சிறப்புடன் விருதை வழங்கிடும் நோக்கம்
,,,சிலிர்ப்புடன் காணலாம் வாவா!
புலமையோன் அருளால் பெரிதினும் பெரிதாய்ப்
......புகழ்பெறும் தாய்ச்சபை காக்கும்
தலைமையைக் காணத் திருச்சியில் கூடு
....தனிமையாய் ஏணியில் ஏற
நிலைமையைச் சொல்லும் வழிகளைக் கேட்க
...நீள்துயில் நீக்கியே செல்லு
மலையென உறுதி பெற்றிடக் கூறும்
....மாண்புளச் சொற்களைப் பேணு!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டப்படவேண்டிய விஷயம்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தையும் அதன் வளர்ச்சியையும் மிக அருமையாக பாடிய அதிரை ஜாபர் அவர்களுக்கும், அதனை அழகிய முறையில் வடிவமைத்த கவிஎன்பன் அபுல் கலாம் அவர்களுக்கும், மிக அருமையாக செய்தியை மக்கள் மன்றத்திற்கு எடுத்துரைத்த அதிரை நியூஸ் குடும்பத்தார்களுக்கும் அகம் குளிர,மனம் மலர வாழ்த்தி, துஆ செய்தவனாக.....
ReplyDeleteசாகுல் ஹமீது.,
பத்திரிக்கை நிருபர்...
பாராட்டப்படவேண்டிய விஷயம்.
ReplyDeleteவாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
கவித்தீபத்தின் கவி வரிகள் ஜாஃபரின் தேனினும் இனிய குரலில் ஜொலிக்கிறது.
ReplyDeleteஇளம்பிறையின் இந்த விழிப்புணர்வு மாநாடு சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துரைகள் வழங்கியோர்க்கு எங்களின் இதயம் படர்ந்த நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.
ReplyDeleteஅதிரைக்கு புகழ் சேர்க்கும்
ReplyDeleteகவிக் கலைஞர் கலாம் காக்காவுக்கும்
குரல்வளக் கலைஞர் நண்பர் ஜபருல்லாவுக்கும்
நன்றியும் வாழ்த்தும்!
//குரல்வளக் கலைஞர் நண்பர் ஜபருல்லாவுக்கும்//
ReplyDeleteவா கண்ணா ஜஹபர் சாதிக்.. எனக்கு குரல்வளையை நெறிக்கும் அளவுக்கு பட்டமெல்லாம் வேண்டாம்.. நட்பின் நண்மையே போதும்..
வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
கவின்மிகு சொல்லால் பிளவிலாச் சேவை
ReplyDelete.....காத்திடும் ஜமாத்தினைப் போற்றி
கவிக்கலாம் வார்த்தை வீரமும் தொண்டும்
.....காட்சிகள் காட்டிடும் வெற்றி
புவிதனில் இளைஞன் புத்துனர் கொண்டு
.....புறப்பட தூண்டிடும் பாரீர்
செவிதனில் கேட்டோர் ஜாஃபரின் குரலால்
.....சேர்ந்திடும் கூட்டமும் காண்பீர்