.

Pages

Monday, April 21, 2014

குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் ஈசிஆர் சாலையில் மறியல் ! 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

தஞ்சை மாவட்ட, பட்டுக்கோட்டை ஒன்றிய, ஏரிபுறக்கரை கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படாததால் ஆதம் நகரில் வசிக்கும் பெண்கள் உட்பட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

தகவலறிந்த அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்கள் சாலை மறியல் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஏரிப்புறகரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்துகிருஷ்ணன், மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் சீராக வழங்கபடவில்லை என்றும், இனிமேல் சீராக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதைதொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ரவிசந்திரன், இனிமேல் தகுந்த காரணமில்லாமல் குடிநீர் வழங்குதில் மீண்டும் குறை ஏற்பட்டு பொதுமக்கள் புகார் செய்தால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்துகிருஷ்ணனை எச்சரித்தார்.

இதைதொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஈசிஆர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதையடுத்து ஊராட்சி  மன்ற தலைவர்  மாலா முத்துகிருஷ்ணன் மற்றும் ஆதம் நகர் பொதுமக்களின் சார்பில் ஜமாத்தினரை காவல்நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டது.











10 comments:

  1. பெண்கள் கலம் காண்பது அதிரையில்
    வரவேற்க வேண்டும்.அதிரை மெளலவிகள் கூல்லாக வசதியாக இருப்பதனால் இதுபோன்ற பிரச்சனைகள் கண்களுக்கு தெறிவதில்லை ஆனால் பத்துவாவுக்கு பஞ்சம்மில்லை்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    மழை பொழிந்தால் ஒழிய, இப்பிரச்சனை தீராது.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. இது போன்ற குடிநீர் பிரச்சனைகளுக்கு சாலை மறியல் இதுதான் சரியாக தீர்வு இனிமேல் இதுபோன்ற பிரச்சனையும் வராது,
    இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. அன்புள்ள சகோதர சகோதரிகளே.
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வுடைய கோபப் பார்வை இந்த அதிராம்பட்டினத்தை வதைக்கின்றது.

    இந்த ஊரில் ஒரு மனையின் விலை முப்பது லட்சம் நாப்பது லட்சங்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். மனை விற்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு வைக்கணும். பெண் வீட்டாரை எதிர் நோக்கி இருக்கும் வாலிபர்களே / ஆண்களே / மாப்பிள்ளை வீட்டாரே, நீங்கள் செய்வது சரியா?

    காசுக்காக மார்க்கத்தையே அடகு வைக்கும் பழக்கம் தற்போது போட்டி போட்டுக் கொண்டு நடக்கின்றது. அதோடு வட்டி தொழிலும் மறைமுகமாக நடக்கின்றது.

    பெண்களிடம் அடக்கம் இல்லை, தாய் / தகப்பன் / கணவன் / மாமனார் / மாமியார் / அண்டை வீட்டார் இவர்களுக்கு மரியாதை கொடுப்பது இல்லை, தான் இஷ்டம் போல் வெளியில் செல்வதும் பல கடைகளுக்கு தேவை இல்லாமல் நுழைவதும், வெட்கமில்லாமல் சாலையில் போகும் பொது சப்தம் போட்டு செல் போனில் பேசுவது சரியா?

    பல கணவன்மார்கள் பல வருடங்களாக ஊர் வராமலேயே பிரிந்து இருக்கின்றனர். 2006இல் அமேரிக்கா போனவர் இன்னும் ஊரு திரும்ப வில்லை. பாவம் மனை வாங்கணுமே, வீடு கட்டணுமே.

    பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளிடத்தில் ஒழுக்கம் சுத்தமாக கிடையாது. படித்து கொடுக்கின்ற ஆசிரியர்கள் ஆசிரியைகள் இவர்களிடமும் ஒழுக்கம் கிடையாது.

    இங்கு எல்லாமே தலைகீழாக இருக்கின்றது, எப்படி இருந்த ஊர், இப்படி போவதற்கு பெரியோர்களே காரணம். பெரியோர்களே, மார்க்க வல்லுனர்களே, இஸ்லாமிய பல இயக்கங்களே நீங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள். ஊரை இப்படியா வீணாக்கிக் கொண்டு இருப்பது.

    மழை எப்படி வரும். குடிக்க தண்ணீர் எப்படி கிடைக்கும். சாலை மறியல் செய்தால் மழை வந்துடுமா? ஆண்களும் பெண்களும் வீதிக்கு வந்து அந்நிய ஆண்களுடம் முகம் கொடுத்து வீராப்பா பேசுவது சரியா? வெளிநாட்டில் இருக்கும் உங்கள் கணவன்மார்கள் இதை பார்க்க மாட்டார்களா? அவர்கள் மனம் வேதனைப் படாதா?

    அதிராம்பட்டினத்தை சுற்றி உள்ள ஊர்களில் கொஞ்சத்துக்கு கொஞ்சம் தண்ணீர் இருக்கின்றதே, ஆனால் அதிராம்பட்டினத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லையே, இதற்க்கு ஒரே வழி எல்லா மக்களும் ஒன்று கூடி, ஒரு மனதோடு, மனதில் கசப்புகள் இல்லாமல் தவ்பா செய்து வாருங்கள். டிவி சேனல்களை நிறுத்தி வையுங்கள். இஸ்லாம் கூறியபடி நடந்து வாருங்கள். பழைய அதிராம்பட்டினம் கிடைத்து விடும்.

    வஸ்ஸலாம்
    ஹுமைராஹ் சுல்தானாஹ்.

    ReplyDelete
  5. பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டியவை சகோதரி ஹுமைராஹ் சுல்தானாஹ் -வின் கருத்து..உண்மையை சொல்லி இருக்கின்றீர்கள் சகோதரி...முஸீபத்துகளை தாங்களாகவே இழுத்துக்கொண்டு போராட்டம் ஏன்...சீரியல் பார்த்து சிரழிந்து போவதை எப்பொழுது நம்மூர் பெண்கள் நிறுத்த போகின்றார்களோ அன்று வரும் மழை அன்று தீரும் மற்ற துன்பங்கள்..அல்லாஹ் நாடட்டும்....

    ReplyDelete
  6. ஊரில் உள்ள தண்ணீர் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி எடுக்கவும். அவர்கள் அரசாங்கத்தின் அனுமதி பெற்று தண்ணீரை விற்பனை செய்கிறார்கள். பூமியில் உள்ள தண்ணிரை உறிஞ்சி எடுத்து நம் மக்களுக்கு தேவையான தண்ணீரை வெளி ஊர்களுக்கு விற்பது கண்டிக்கதக்கது

    ReplyDelete
  7. மழை நீர் வீணாக கடலில்தான் கலக்கிறது அதனை தடுக்க எத்தனை அணை கட்டப்பட்டுள்ளது?

    குளத்தில் நீர் சேகரிக்க முடிகிறதா? அல்லது முதல்வர் கொண்டுவந்த மழை நீர் தொட்டி திட்டத்தை அரசு அதிகாரிகள் செயல்படுத்தினார்களா?

    விவசாய நிலங்களை அழித்து மனைபோட்டதை மக்கள் வரவேற்றார்கள் இப்போ எப்படி மழை வரும். எந்த முயற்சியும் இன்றி எதுவும் கிடையாது.

    இனி கடல் நீர் சுத்திகரித்து மக்களுக்கு குடி நீர் திட்டத்தை அரசுதான் செயல் படுத்தனும் இதுவும் நடக்கலாம் அப்ப அவங்க கமிஷன்- கொள்ளை அடிக்க முடியும்.

    ReplyDelete
  8. ஊரில் உள்ள தண்ணீர் தொழிற்சாலையை முன்னாடி தண்ணீர் குடம் மறியல் போரோட்டம் நடத்துங்கள்

    ReplyDelete
  9. எப்படியாகிலும் தண்ணீர் தொழிற்சாலையை முற்றுகை இடுவதை விட வேறு வழியில்லை.

    அல்லது ஒரு ஒப்பந்த்தம் செய்ய வேண்டும், அவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீரை நிலத்திலிருந்து எடுக்கின்றனரோ அதில் முக்கால்வாசி தண்ணீர் நமதூர் மக்களுக்கு இலவசமாக தர வேண்டும்.

    இப்படி செய்தால் நல்லது, இந்த ஒப்பந்தத்துக்கு ஒத்து வந்தால் சரி, இல்லையென்றால் தொழிசாலைக்கு முன் நின்று போராட்டாம்.

    அவரிடம் காசு பணம் மலைபோல் இருக்குதாம், எல்லா அதிகாரிகளும் அவரின் பாக்கேட்டுக்குள்லாம்,

    அதிராரிகளுக்கு எல்லாம் அதிகாரி அல்லாஹ் ஒருத்தன் இருப்பதை கண்டு அவர்கள் பயப்படவில்லையா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.