.

Pages

Saturday, April 26, 2014

அதிரை ESC நடத்திய மின்னொளி கைப்பந்து தொடர்போட்டியில் மாயாவரம் அணி கோப்பை கைப்பற்றியது !

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ESC ] சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று நமதூர் காட்டுப்பள்ளி மைதானத்தில் துவங்கியது.

நேற்று இரவு முதல் தொடர்ந்து விறுவிறுப்பாக  நடைபெற்று வந்த ஆட்டத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த 25 அணிகள் பங்கேற்று ஆடியது. போட்டியின் இறுதியில் மாயாவரம் தாய் அணியினர் முதல் பரிசையும், காரைக்குடி ஸ்டார் அணியினர் இரண்டாம் பரிசையும், மூன்றாம் பரிசை அதிரை ESC அணியினரும் தட்டிச்சென்றனர்.

இன்றைய ஆட்ட இறுதியில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிரை அனைத்து மஹல்லா தலைவர் MMS. சேக் நசுருதீன், முன்னாள் கால்பந்து வீரர் முகம்மது கனி, கீழத்தெரு ஜமாஅத் தலைவர் தாஜுதீன், NMS. மன்சூர், மான் நெய்னா முஹம்மது, சேக்தாவூது, மான் சேக், கால்பந்து விளையாட்டு வீரர் அன்வர் அலி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பை வழங்கி கெளரவித்தார்கள்.

இன்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்து ரசித்தனர்.



9 comments:

  1. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் !!!!!

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் !!!!!

    ReplyDelete
  3. வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் !!!!!

    ReplyDelete
  5. ஈஸ்டர்ன் விளையாட்டு குழு நடத்திய இந்த விளையாட்டு ஒரு மாபெரும் வெற்றி. வாழ்த்துக்கள.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இந்த விளையாட்டினை மிக சிறப்பாக நடத்திய ESC நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    வெற்றிப்பெற்ற அணினற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.