.

Pages

Monday, April 28, 2014

அதிரைக்கு மழை வேண்டி தக்வா பள்ளி மீன்மார்கெட் வியாபாரிகள் நடத்திய சிறப்பு பிரார்த்தனை ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை தக்வா பள்ளி மீன் மார்க்கெட் வர்த்தகர்கள் சார்பில் வறண்டு காணப்படும் அதிரைக்கு மழை வேண்டி இன்று மாலை மீன் மார்கெட் வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் தக்வா பள்ளி இமாம் தமீம் அன்சாரியின் தலைமையில் பங்கேற்ற அவரது குழுவினரால் மழை பைத் ஒதப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்கெட் பகுதி வர்த்தகர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மீன்வியாபாரிகள், காய்கறி வியாபார்கள், இறைச்சி வியாபாரிகள் உள்ளிட்ட அப்பகுதியில் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் ஏற்று நடத்தினார்கள்.









14 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஊரில் மழை வேண்டி மக்கள் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்துவதும் இப்போது மழைக்காக மவுலுது ஒதுவதுமாக இருக்கு

    இனி மாணவர்கள் தன் பங்கிற்கு நேஷனல் அன்தெம்ஸ் பாடுவதற்க்கு பதிலாக ரெயின் அன்தெம்ஸ் பாட வேண்டிய காலம் .

    என்னத்த சொல்ல காலத்தின் கொடுமை!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்படாத ஒன்றை செயல்படுத்தி வரும் இதுபோன்ற மார்க்க விரோத செயலை கண்டிக்க எந்தவொரு தவ்ஹீத் அமைப்பும் முன்வராதது கண்டிக்கத்தக்கது. வாக்கு சேகரிக்க வீடு வீடாகச்செல்ல முனைப்பு காட்டும் இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதிரையில் தவ்ஹீத் பிராச்சராதை முடுக்கிவிட இன்னும் பல தவ்ஹீத் அமைப்புகள் உருவாக வேண்டும்.

    வெளிநாடுகளில் வசூல் வேட்டையில் கவனம் செலுத்திவரும் இவர்களுக்கு சகோதரர்கள் வழங்கிவரும் நிதி உதவியை நிறுத்திவைத்தால் எல்லாம் சரியாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இப்படி கோபம் ? இருக்கும் அமைப்பால் ஏகப்பட்ட பிரச்சனை மேலும் தவ்கீது அமைப்பு உருவாக வேண்டுமா இதற்காக ?

      விருப்பம் இல்லாவிட்டால் தனியாக தவ்கீது மார்க்கெட் உருவாகிக் கொள்ளுங்கள்!

      Delete
    2. பிஸ்மில்லா ... يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِّمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
      நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. 2.264 . எந்த ஒரு செயலையும் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின்தூதரிடம்மல்லவா முன்மாதிரி பார் க்க வேண்டும் இது லக்கி மார்க்கம் இஸ்லாம் மல்ல. لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
      அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21

      Delete
  5. இந்த பதிவை போட்ட அதிரை நியூஸை வன்மையா கண்டிக்கிறேன்

    ReplyDelete
  6. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிகம் பேசப்பட்டது மதச்சார்பின்மை என்றக் கொள்கை. அதனால் நாட்டில் அமைதியின்மை, குழப்பம், பிரச்சனைகள், வளர்ச்சிகள் பாதிக்கப்படுதல், இதுபோன்ற சமூக விரோதப் போக்குகள் நடைபெறும். எனவே அதனை அமைதியை விரும்பும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து குரல்கொடுத்தார்கள். தான் ஒரு கொள்கையில் இருந்தால் அதனைப் பேணி வாழ வேண்டும். மற்றவர்களை தூண்டி பிரச்சனைகள் உண்டாக்கக் கூடாது.
    இதனை நல்லமனிதர்கள் யாவரும் தன் மனதில் இருத்தி அமைதியுடன் சமுதாயம் வாழ தீங்கு செய்யாது இருக்கவேண்டும்.

    இன்று பல சார்பின்மைகள் உள்ளது. மதச்சார்பின்மை மட்டுமல்ல, ஜாதிச்சார்ப்பின்மை, கொள்கை சார்பின்மை, நிறச் சார்பின்மை, தெரு சார்பின்மை, இப்படி பல சார்பின்மைகள் பற்றி மக்கள் மனதில் நியாப்படுத்த வேண்டியுள்ளது. இந்தச் சார்ப்பின்மைகளுக்கு மாற்றமானவர்கள் மூலம்தான் அமைதியைக் கெடுக்கும் குழப்பங்கள் சமுதாயத்தில்உண்டாகும்.

    பத்திரிக்கை தர்மம் ஒன்று உள்ளது. அது காழ்ப்புணர்வு காட்டாது நடப்பு செய்திகளை பிரசுரிக்கும். அது சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். எல்லோரையும் திருப்திபடுத்த இயலாது. திருப்தியடையாதவர் ஒதுங்கிக்கொள்வதே நல்லப் பண்பு. அதைவிடுத்து அதிரை நியூசை கண்டிக்கிறேன் என்று மனதில் கட்டுப்பாடு இல்லாமல் கிளம்புவைதை எல்லாம் எழுத்தில் கொண்டுவருவது தருமம் ஆகாது. அடக்கம் அமரருள் உய்க்கும். எந்தவித இலாபமும் இல்லாமல் தியாகம் செய்யும் அதிரை நியூசை ஒரு தனிமனிதன் 'கண்டிக்கின்றேன்' என்று கூறினால், அது அவரின் அறியாமை என்றுமட்டும் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது ?
    இருப்பினும் இதுபோன்ற பின்னூட்டங்களை தடுத்துவிடுதல் நல்லது. சமுதாய அமைதி ஒன்றே முக்கியம்.

    ReplyDelete
  7. தவ்ஹீத் அமைப்புகள் நடத்திய எந்த மழைத்தொழுகையிலும் பிரியானி இல்லை இதில் இருந்து தெரியவில்லை இவர்கள் காசுக்கு மார்ரடிக்கிறவர்கள் என்றும் முதலில் அந்த மார்க்கட்டில் மகலில் வட்டி தொழில் களைகட்டுகிறது ஊரில் உள்ள அனைத்து வட்டிக்கடைக்காரர்களும் இந்த மார்க்கட்டை சுற்றிதான் வட்டமிடுகிறார்கள் இரண்டாவது கஸ்டப்பட்டு சம்பாதித்தா காசை இரவில் சீட்டு விளையாடுவது மது அருத்துவது போன்ற காரியங்களை அந்த மார்க்கட்டில் நடைபெறுகிறது இதை முதலில் பள்ளிவாசல் நிர்வாகிகள் தடுத்து நிருத்தவேண்டும்

    காசும் பணமும் கொத்தால் மார்க்கம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் செய்யும் இவர்கள் இருக்கும் வரை இதுபோன்ற காரியங்கள் ஒழியாது

    ReplyDelete
  8. எந்தவித இலாபமும் இல்லாமல் தியாகம் செய்யும் அதிரை நியூசை ஒரு தனிமனிதன் 'கண்டிக்கின்றேன்' என்று கூறினால், அது அவரின் அறியாமை என்றுமட்டும் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது ?

    ReplyDelete
  9. பெரியார் தாசன் மர்கூம் அப்துல்லாஹ் அவர்கள் மேற்கத்திய நாடுகள் சென்று துபாய் வந்தநேரம் அவரை சந்திக்க வாய்ப்புகிட்டியபோது அப்போது அவர்கள் சொன்னது மேற்கத்திய நாடுகளில் Rain Rain go away come come another day என்று பள்ளி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மழை வேண்டாம் என்று அங்குள்ள பள்ளிகளில் பாட்டு படிப்பார்கள் அதை மழையில்லாத நமதூரில் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு சொல்லிகொடுத்து ஊரில் மழையே இல்லாமல் போய்விட்டது என்று கிண்டலாக சொன்னது ஞாபகம் வருகின்றது .

    ReplyDelete
  10. ஜப்பானில் உள்ள Ibraka ken என்ற ஊரில் ஜப்பானின் முதல் இஜ்திமா ஏப்ரல் 25-27, 2014 அன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஜப்பான் வாழ் அதிரையர்கள் உள்பட உலக மற்றும் ஜப்பானிய முஸ்லிம்கள் என சுமார் 3000 பேர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர் . மார்க்க அறிஞர்களின் சிறப்பு பயன்களும் அதன் மொழிபெயர்ப்புகளும் தங்கும் இடம் மற்றும் உணவுவகைகளும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது .ஜப்பானில் ஒரே இடத்தில் முஸ்லிம்கள் அனைவர்களும் ஒரே ஜமாஅத்தாக தொழுததும் மாநாட்டில் கலந்துகொண்டதும் இதுவே ஜப்பானிய வரலாற்றில் முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது .குறைந்த முஸ்லிம் எண்ணிக்கை யை கொண்ட ஜப்பானில் ஜப்பானிய மக்களிடம் இஸ்லாத்தையும் தவ்ஹீது மற்றும் தாவத்துடைய பணிகளை எத்திவைத்து அவர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.
    ஜப்பானில் இருந்து

    அபூபக்கர்.கேன்

    அஹமத் இலியாஸ்29 April 2014 01:28

    கேள்வி பதில் நிகழ்ச்சியா? இஸ்லாத்தையும் தவ்ஹிதையும் பற்றின விளக்கமா? அல்லாஹ் சான்றளித்த அந்த சிறந்த கூட்டம் தப்லீக்கா? அல்லது நன்மையை ஏவி தீமையை தடுக்கும் தவ்ஹித் ஜமாத்தா. சிந்திக்காமலும் சிந்திக்கவிடாமலும் எத்தனைப்பேரை தஃவா?? செய்யப்போகிறீர்கள்.. இஸ்திமாய்யாக எத்தனை தீமைகளை கண்டித்துள்ளீர்கள்.. தப்லிக் செல்லக்கூடியவர்கள் ஒருநாளாவது திருமறைக்குர்ஆனின் தர்ஜுமாவைக் கூட்டாக படிக்கப்பட்டதுண்டா? நிஜாமுத்தீன் தர்காவை (தப்லிக் தலைமையகம் பக்கத்தில்) எப்போது கூட்டாக கண்டித்துள்ளீர்கள்? எத்தனை வரதட்சனைக் கொடுமைகளை கூட்டாக கண்டித்துள்ளீர்கள்? இரத்த தானம் முகாம் கூட்டாக செயததுண்டா? இட ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கும் எம் இஸ்லாமியர்களுக்கு என்ன போராட்ட திட்டம் வகுத்தீர்கள்? தொடரும்..

    Aboobakkar, Can.29 April 2014 09:37
    அன்பு சகோதரர் அஹமது இலியாஸ் அவர்களுக்கு ...
    இதுபோன்ற நாடுகளில் இந்த இஜ்திமாவில் முஸ்லிம்கள் கலந்துகொண்டனர் என்பதே சிறப்பு தப்ளிக்கில் இருப்பவர்கள் அனைவரையும் தர்கா பேர்வழிகள் போல் சித்தரித்து இருகின்றீர்கள் அது தவறு .
    ஒரே ஜமாத்தை வலியுரித்துவதில் இஸ்லாம் மிக கண்டிப்பாக உள்ளது ஓர் இறை ஏகத்துவத்தை ஏற்றுகொண்ட அனைவரும் முஸ்லிம்களே.ஒன்றான ஜமாத்தை கூறு போடுகின்றவர்கள் நாசமாகட்டும் என்று இறைவன் கண்டிப்பாக எச்சரிக்கை செய்யும்போது உங்களைமட்டும் ஏன் தவ்ஹீத் ஜமாஅத் என்று குறிப்பிடுகின்றீர்கள் அப்படி என்றால் உங்களின் கட்சித்தாவல் கொள்கையை ஏற்காதவர்கள் எல்லாம் தவ்ஹீதை பின்பற்றாத முஸ்லிம்களா ? முதலில் உங்களின் அமைப்பின் Title லை மாற்றி கொள்ள முயற்சி செய்யுங்கள் இல்லையேல் நாளைய இந்திய வரலாற்றில் காவிகள் இந்தியாவில் தவ்ஹீத் என்ற ஓர் இறைகொள்கையை ஏற்றுகொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தும் அதை ஏற்று கொள்ளாத மற்றவர்களும் இருந்து வருகின்றனர் என்று இப்படியாக முஸ்லிகள் விமர்சனம் செய்யபடுவார்கள். தொடரும் ........

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அழைக்கும்
    அன்பிற்கினிய சகோதர்களே நமகுள்ளே ஏன் இந்த கருத்து வேறுபாடு முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் இது நமது அதிரை உலமாக்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல மாறாக தங்களின் வருமான குறைபாட்டின் காரணமாக ஊரில் ஆலீம்கள் என்று தமக்குத்தாமே போலியான வேடமிட்டு அல்லாஹுவும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தராத செயல்களை செய்கிறார்கள் என்ரால் கண்டிப்பாக இவர்கள் அனைவரும் முழுமையான மார்கத்தை கற்றவர்களாக இருக்க வாய்ப்பில்லை ஆகவே இவர்களெல்லாம் தனக்கென்று ஒரு மார்கத்தை வகுத்துவைத்து வாழ்கின்ற மார்க்க உ(ல)ப்பைமார்ககளே அன்றி)மாக்கல் அல்ல என்பதை மனதில் நிறுத்தி அவர்களின் அறியாமைக்காக அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்க பிராத்திப்போமாக

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும்
      அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்க பிராத்திப்போமாக ஆமீன் .

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.