.

Pages

Tuesday, April 8, 2014

காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் M.M.S. அப்துல் கறீம் முன்னிலையில் இளைஞர்கள் பலர் கட்சியில் இணைந்தனர் !

அதிரையில் நகர காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியோர் நடத்திய செயல் வீரர்கள் கூட்டம் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் தலைமை வகிக்க, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை  மைதீன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது என வலியுறுத்தி நகர காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் பேசினார்கள்.

அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் முன்னிலையில் அதிரை நகர இளைஞர்கள் பலர் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். இதில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்துகொண்டார்கள்.




3 comments:

  1. tntj atharavil modi prime minister ..........40 namathaay bjp+admk+pj= 100% profit

    ReplyDelete
  2. எத்தனை இளைஞர்கல் தேர்தலில் போட்டி இட சீட்டு கொடுத்து இருக்காங்க. வழக்கம் போல் பெருசுகளே போட்டி இடுறாங்க எப்படி கட்சி வளரும்? இட ஒதுக்கீடுக்கு sachar Committee பரிந்துரை செய்தும் இன்னமும் அமுல் படுத்தல இனிமேல் ஆட்சிக்கு வந்து செய்ய போறிங்க? இதை பற்றி போராட்டம் பண்ணி இருக்கீங்களா?

    ReplyDelete
  3. பட்டுக்கோட்டை மேலும் மேலும் வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுகொண்டு இருக்கிறது. நம்ம தொகுதி MLA, MP, அனைவரும் முதலில் பட்டுக்கோட்டையே தான் கவனிக்கிறார்கள். ஏன் நமதூர் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லையா பிறகு ஏன் நமதூர் வளர்ச்சிக்கு உதவ மறுக்கிறார்கள். பேருந்து நிலையம் அமைக்கவும், அரசு மருத்துவமனையே விரிவுபடுத்திதருமாறும் பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும், எங்கள் அடிப்படை தேவையே நிறைவேற்றி தருமாறும், எங்கள் ஊருக்கு புகைவண்டி வர முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். பட்டுக்கோட்டை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கிறார்கள் அந்த நிதி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. நம்ம ஊருக்கு செய்ய சொன்னால் மட்டும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். நமதூர் மக்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கும், இன்னொருபக்கம் திமுக கட்சி வெற்றி பெறவும், இன்னொருபக்கம் அதிமுக கட்சி வெற்றி பெறுவதற்கும் நம்ம உயிரை கொடுத்து உழைக்கிறோம். இதில் ஒரு கட்சி வெற்றி பெரும் அந்த கட்சி வேட்பாளரிடம் எங்கள் ஊருக்கு இந்த இந்த வசதிகள் செய்து தாருங்கள் என்று கூறினால் இரண்டு திட்டங்களை நிறைவேற்றுவதற்குள் ஐந்து ஆண்டு முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் செய்து தருகிறேன் என்று கூறிவிடுவார். நாம் அவர்கள் வெற்றி பெற இரவு, பகல் பாராமல் உழைத்ததற்கு நமதுருக்கும், நமதூர் மக்களுக்கும் அமைதிப்படை அல்வாவை கொடுத்து விட்டு சென்றுவிடுவார். அப்புறம் என்ன அடுத்த தேர்தல்தான். மக்களே நீங்கள் கட்சியால் வேறுபட்டு இருந்தாலும் நீங்கள் அனைவரும் அதிராம்பட்டினத்தை சார்தவர்கள் என்பதை மட்டும் மறந்துவிட கூடாது. நமதுருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற நாம் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும். ஊரின் முன்னேற்றமே ரொம்ப முக்கியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.