கடந்த சில மாதங்களாக இதற்குரிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தொடர்ந்து நடைபெற வேண்டிய முக்கிய பணிகளில் சிலவற்றை கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கீழத்தெரு ஜமாத்தினர் இன்று காலை அதிரை பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பேரூராட்சியின் செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைதலைவர் ஆகியோருக்கு தனித்தனியே கோரிக்கை மனுக்கள் எழுதி, அதில் குளத்தின் நிறைவுபெற வேண்டிய பணிகளை விரைந்து முடித்துதர துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து மான் சேக் நம்மிடம் கூறியதாவது...
'நாங்கள் கொடுத்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதமானால் ஜமாத்தின் சார்பில் தஞ்சை சென்று மாவட்ட ஆட்சியரிடமும், பேரூராட்சியின் இணை இயக்குனரிடமும் புகார் அளிப்பதை தவிர வேறுவழியில்லை' என்றார்.
லட்டர்பேடில் சங்ககளின் அரசு பதிவு எண்னை கானோம் !!! தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் ..
ReplyDelete// லட்டர்பேடில் சங்ககளின் அரசு பதிவு எண்னை கானோம் !!! தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் ..//
ReplyDeleteகாமெடி பண்ணாதிங்க பிரதர்
சங்கம் ரிஜிஸ்தர் பண்ணினாத்தானே நம்பர் கிடைக்கும். இந்த சங்கம் மட்டுமில்லே ஊரிலே இருக்கிற எல்லா சங்கதிற்கும் இதே நிலைமைதான்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அன்பார்ந்த சகோதரர்களே பதிவு இலக்கம் ஒரு புறம் இருக்கட்டும்.
பொதுநலன் கருதி இதைப் பாப்போம்.
கடந்த சில நாட்களுக்கு முன் நான் அவ்வழியே சென்றேன், அப்போது சகோதரர் மான் சேக் அவர்களை சந்திக்க நேரிட்டது, பொது விஷயங்கள் பல பேசிக்கொண்டே நடந்து போகையில் இந்த குளமும் எங்கள் கண்களில் பட்டது.
கம்பி கேட்டுகளை கடந்து சற்று உட்சென்று பார்க்கையில் அந்தக் குளம் புனரைக்கப்பட்டு இருந்தது.
முடி வெட்டினால் ஒழுங்காக முடிவெட்ட வேண்டும்.
ஷேவ செய்தால் ஒழுங்காக ஷேவ் செய்ய வேண்டும்.
அரை குறையாக முடி வெட்டினாலும், அல்லது ஷேவ் செய்தாலும் யாரும் அதை ஏற்க முடியாது.
அது போலவே இந்த குளத்தின் புனரைப்பும் இருக்கின்றது. இதற்கு அதிரை பேரூர் நிர்வாகம் பதில் அளித்தே தீர வேண்டும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
நல்ல நடவடிக்கை -முயற்சி தான் சொல்லவேண்டும் , இதே குளத்தில் தான் ஆடு முட்டி சுவர் இடிந்து விழுந்தது பற்றி செய்தி வந்தது அதன் மீது நடவடிக்கை பற்றி காணோம்.
ReplyDeleteதற்போது போடப்பட்ட ரோடு தரமற்றவை என்றும் அடுத்த மழைக்கு இருக்காது என்று மக்கள் பேசுகின்ற நிலைமையில் உள்ளது.
பொது துறை பணிகள் ஒரு குறுப்பிட்ட நபர் தான் contract எடுக்கிறார் என்றால் அங்கே தில்லு முள்ளு இருக்க தான் செய்யும் அதனால் தான் வேலைகள் தரமற்றவையாக இருக்கின்றன.
பொது மக்கள் இதன் மீது கவனம் செலுத்ததால் அரசு அதிகாரிகள் ஆட்டை போடுகிறார்கள்,
உங்கள் முயற்சி மற்றவர்களுக்கு முன் உதாரணம் - வாழ்த்துக்கள்
//தற்போது போடப்பட்ட ரோடு தரமற்றவை என்றும் அடுத்த மழைக்கு இருக்காது என்று மக்கள் பேசுகின்ற நிலைமையில் உள்ளது.//
ReplyDelete//பொது மக்கள் இதன் மீது கவனம் செலுத்ததால் அரசு அதிகாரிகள் ஆட்டை போடுகிறார்கள், //
1 1/2 ஜல்லி மகிழன்கோட்டை வரை முழுமையாகப் போடவில்லை. அதற்க்கு ஒதுக்கிய பணம் என்னாச்சு ????
அண்ணே எனக்கு ஒரு டவுட்டு!
ReplyDeleteஇந்த நாடகம், 50 இலட்ச திட்டப் பணியில் நடந்த முறைகேட்டை மறைக்கவா, வெளிக்கொணரவா?
திமுக, அதிமுக என எல்லோருக்கும் பங்கு பணம் போயிருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, சமூக ஆர்வலர்கள் முறையாக நபார்டு வங்கி, ஆட்சியர் இன்னும் பலருக்கு மனு அளித்து இதில் நடந்துள்ள ஊழல்களை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.
அண்ணே, இங்க வாங்கண்ணே, நமது கவருமெண்டு நல்ல கவருமெண்டு, யாரும் குறை சொல்ல வேண்டாம், அப்படியே ஒப்பந்தகாரர்களும் ரொம்ப ரொம்ப நல்லவர்கள்.
ReplyDeleteநடந்து முடிந்த தேர்தலுக்கு அதிமுக எல்லோருக்கும் காசு கொடுத்தது, காசுன்னா வெறும் ஐநூறு ரூபா அவ்வளவுதான், வந்த காசு பத்தாமே தன் பாகெட்டிளிருந்து போட்டு கொடுத்ததாக அதிரை அதிமுக பிரமுகர் ஒருவர் சொன்னார். ஏன் தெரியுமா? பரசுராமன் அவருக்கு நெருக்கமானவராம்.
யாங்க, நாம சும்மா யாரையும் குறை சொல்லக் கூடாதுங்க, இந்த குளம், பொறவு அந்த ரோடு இதுக்கெல்லாம் வந்த காசு பாத்தாமே தங்கள் பாகெட்டிளிருந்து போட்டிருப்பாணுக.
குளத்தைப் பாருங்க எவ்வளவு அழகா இருக்கே, இந்த ரோட்டைப் பாருங்க அப்படியே மார்பில் கல்லில் போட்டதுபோல் இருக்கு.