.

Pages

Friday, April 18, 2014

அதிரையில் தீவிரமாக வாக்கு வேட்டை நடத்திவரும் அதிமுக கட்சியினர் !

அதிமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என முதல்வரும், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளதை அடுத்து அதிரை நகர அதிமுகவினர் கடந்த சில நாட்களாக அதிரையின் அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்களை சந்தித்து அதிமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு. கு. பரசுராமனுக்கு வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக வாக்கு வேட்டை நடத்திவருகின்றனர்.


5 comments:

  1. கூட்டம் ரொம்ப கம்மியாக இருக்குதே, பணம் ஏதும் விளையாடலையா.

    ReplyDelete
  2. ADIRAI Post Man Adirai
    //கூட்டம் ரொம்ப கம்மியாக இருக்குதே, பணம் ஏதும் விளையாடலையா.//

    Mohd Salim
    //Sariya sonninga//

    ரெண்டுபேரு லொள்ளும் தாங்கமுடியலப்பா.

    ReplyDelete
  3. அப்பா, அம்மா, அண்ணே, அக்கா, மாமா, மாமி, நீங்கள் எல்லோரும் எங்களில் ஒருவர், நாம் எல்லாம் ஒரே குடும்பம், எங்களுக்கு வாக்களியுங்க, நாங்க வந்தா வானத்தில் உள்ள வானவில்லை எடுத்து இந்த ரோட்டை போட்டு தருவோம்.

    வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எடுத்து உங்கள் வீட்டில் பொருத்திவிடுவோம் மின்சாரம் இல்லாட்டியும் ஒரு பிரச்சனையும் இல்லை. இப்படி பல வாக்குறுதிகளை அள்ளி வீசி இந்த மக்களை மயக்கி வெற்றி அடைந்து மக்களுக்கு என்னத்தே செய்திடப் போறீங்க. தங்களுடைய பை நிரம்பிச்சா? அப்பவும் போதாதே! பண ஆசை சும்மா விட்டுடுமா உங்களை.

    அதிரையில் உள்ள ஒரு சில குளங்களை தூர்வாரி சுத்தம் செய்து, சுற்றி சுவர் எழுப்பி பண்படுத்த பல இலட்சம் பணம் ஒதுக்கியும் வேலை முடிந்த நிலையில் ஒவ்வொரு சுவரா ஆடு முட்டி கீழே விழுகின்றதே என்ன காரணம்? இதுதான் உங்களுடைய வேலையா?

    பண ஆசையே துன்பத்திற்கு காரணமாம்!

    புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது.
    மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்.

    மீனுக்கு சிக்கியது புழு.
    மனிதனுக்கு சிக்கியது மீன்.
    புழுவிற்கு...?!

    ஆனாலும் காத்திருந்தது புழு.
    மனிதன் மண்ணுக்குள் வரும் வரை.

    எதுவும் எதையும் விட.
    உயர்ந்ததுவுமல்ல
    தாழ்ந்ததுவுமல்ல

    எதனிடமும் யாரும் தப்ப முடியாது.

    எல்லா வரவு சிலவு கணக்குகளையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுமா?

    ReplyDelete
  4. இவங்க (ADMK ) கூட்டம் கம்மி தான் பணம் விளையாடல போல தெரியது அதாலதான் 3 போட்டோ போட்டு இருக்காங்க இந்த தளத்தில்

    ஆனால் DMK தேர்தல் பிரச்சாரத்திற்கு 15 போட்டோ போட்டு இருக்காங்க ஆக பணம் எங்க விளையாடி இருக்கும்?

    மணமகன் ஊர்வலத்தில் கூட்டம் கூடுவதை பார்த்த பெற்றோர்கள் தமக்கு மொய் அதிகம் வரும் என்று நினைப்பார்களாம்

    அதை போல தான் அதிராம் பட்டினத்தில் நடக்கும் கூத்தும் தெரியது.

    கொடி பிடிப்பதால் கோடி அடித்ததை மக்கள் மறக்க வில்லை என்பதை மறக்க வேண்டாம்!

    அஹ்மது ரிதுவான் - துபாய். அவர்களின் அசத்தலான வரிகள் சிந்திக்க கூடியவை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.