கடந்த இரு நாட்களாக பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த தலைசிறந்த அணிகள் விளையாடினார்கள். இதில் இறுதி ஆட்டமாக அதிரை WFC அணியினரும் பட்டுக்கோட்டை AVK அணியினரும் மோதினார். இரு அணிகளும் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பெரும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் எந்தவொரு அணியும் கோல் போடாததால் ட்ரை பிரேக்கர் முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதிலும் இரு அணியினரும் சமநிலையை பெற்றதால். நீண்ட பரிசிலினைக்கு பிறகு டாஸ் மூலம் வெற்றி வாய்ப்வை நிர்ணயம் செய்வது என போட்டி நடத்துனர்களும், ஆட்டத்தை வழிநடத்தியவரும் முடிவு செய்தனர். அதன்படி டாஸ் வென்ற WFC அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
கடந்த இரு நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த ஆட்டத்தில் யில் அதிரை WFC அணியினர் முதல் பரிசையும், பட்டுக்கோட்டை AVK அணியினர் இரண்டாம் பரிசையும், மூன்றாம் பரிசை அதிரை AFFC அணியினரும் தட்டிச்சென்றனர்.
இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பல்வேறு ஆர்வலர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த தொடர் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்திய WFC அணியை சேர்ந்த அஸார், அன்சர்கான், AFFA அணியை சேர்ந்த முபீஸ் மற்றும் பட்டுக்கோட்டை AVK அணியை சேர்ந்த ஒருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
நேற்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்து ரசித்தனர்.
செய்தி மற்றும் புகைப்படங்கள் : அப்துல் வஹாப்
சமீபத்திய காலங்களில் விளையாட்டிற்காக முக்கியத்துவம் போட்டிகள் நடத்துவது ஆரோக்கியமானது எல்லோரும் வரவேற்க்கவேண்டும்் வாழ்த்துக்கள்
ReplyDeleteபரிசு அளித்தவர்களின் பெயர்களை பட்டியல் வெளிவீடாத காரணம்?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood dears, all 31 sangam members, you guys are really done a great job,
DeleteThis comment has been removed by the author.
Deleteசகோ மான் சேக் சொல்லியதுபோல் பரிசு அழித்தவர்களை பதிவு செய்யாதது ஏன்?
ReplyDelete